Tuesday, April 30, 2013

பொங்கல்

பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. பச்சரிசி - 2 கப் (400 கிராம்)
  2. பாசிப் பருப்பு - 1 கப் (200 கிராம்)
  3. மிளகு - 1 தேக்கரண்டி
  4. சீரகம் - 1 தேக்கரண்டி
  5. முந்திரிப் பருப்பு - 10
  6. மல்லித் தழை - சிறிது
  7. நெய் - 3 மேஜைக்கரண்டி
  8. உப்பு - தேவையானஅளவு 
செய்முறை -
  1. பச்சரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகத்தை வறுத்து எடுக்கவும்.
  4. அடுப்பில் குக்கரை வைத்து பச்சரசி, பாசிப் பருப்பு, வறுத்த முந்திரிப் பருப்பு, வறுத்த மிளகு, சீரகம், உப்பு மற்றும் 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணி விடவும்.
  5. நீராவி அடங்கியதும் மூடியைத் திறந்து பொங்கலுடன் மல்லித் தழை, 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான பொங்கல் ரெடி. சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Friday, April 26, 2013

மோர்க் குழம்பு

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. அதிகம் புளிக்காத தயிர் - 2 கப் ( 400 மில்லி )
  2. மல்லித்தழை - சிறிது
  3. உப்பு - தேவையான அளவு
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 3
  3. பச்சை மிளகாய் - 2
  4. சீரகம் - 1 மேஜைகரண்டி
  5. பொட்டுக் கடலை - 2 மேஜைக்கரண்டி
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும். மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கடைந்து கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸ்யில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, அரைத்த கலவையைப் போட்டு 1 நிமிடம் கிளறவும்.
  3. பிறகு தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் மல்லித் தழையைப் போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான மோர்க்குழம்பு ரெடி.

புளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi


தேவையான பொருள்கள் -
  1. மிளகாய் வத்தல் -100 கிராம்
  2. மல்லி - 150 கிராம்
  3. சீரகம் - 50 கிராம்
  4. மிளகு - 25 கிராம்
  5. கடலைப் பருப்பு - 25 கிராம்
  6. வெந்தயம் - 25 கிராம்
  7. கறிவேப்பிலை - 1 கப்
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், மல்லி, மிளகு, கடலைப்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் தனித்தனியே போட்டு மிதமான சூட்டில் வைத்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பை ஆப் பண்ணி விட்டு கடாயில் இருக்கும் சூட்டில் கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.
  3. சீரகத்தை வறுக்க தேவை இல்லை. அதை வறுத்த பொருள்களுடன் சேர்த்து கலந்து விட்டு அனைத்தையும் ஆற விடவும். 
  4. ஆறிய பின் மிசினில் கொடுத்து அரைத்து கொள்ளவும். ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்து 5 மாதங்கள் வரை வைத்து உபயோகிக்கலாம்.

சேமியா உப்புமா

                  
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சேமியா - 2 கப்
  2. தண்ணீர் -11/2 கப்  
  3. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1/2

  5. பச்சை மிளகாய் - 2
  6. இஞ்சி - 1 இன்ச் அளவு
  7. கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -
  1. சேமியாவை உடைத்து கடாயில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  2.  வெங்காயம், இஞ்சி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் 11/2கப் தண்ணீரோடு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் சேமியாவைப் போட்டு அடிப் பிடிக்காமல் நன்கு கிளறவும். சேமியா நன்கு வெந்ததும் இறக்கி விடவும். சேமியா உப்புமா ரெடி.                         

பருப்பு வடை

பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. பட்டாணிப் பருப்பு - 100 கிராம்
  2. கடலைப் பருப்பு - 100 கிராம்
  3. துவரம் பருப்பு - 100 கிராம்
  4. பச்சை மிளகாய் - 3
  5. பெரிய வெங்காயம் - 1
  6. சோம்பு - 1/2 தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை - சிறிது
  8. உப்பு - தேவையானஅளவு
  9. காயம் - 1/4 தேக்கரண்டி
  10. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை -
  1. மூன்று பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். நான்கு மேஜைக்கரண்டி பருப்பை தனியே எடுத்து வைக்கவும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3. ஊற வைத்த பருப்பு, காயம், சோம்பு, உப்பு சேர்த்து கிரைண்டர் அல்லது மிக்ஸ்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  4. அரைத்த பருப்போடு தனியாக எடுத்து வைத்த பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
  5. எலுமிச்சை அளவு மாவை கையில் எடுத்து வடைகளாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். 
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் 3 அல்லது 4 வடைகளை போட்டு மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். மீதமுள்ள மாவையும் அவ்வாறே சுட்டு எடுக்கவும்.
  7. சுவையான முப்பருப்பு வடை ரெடி. வடைகளை ஒரு டிஸ்யூ பேப்பரில் 15 நிமிடம் வைத்து பின் காபி/ டீயுடன் பரிமாறலாம். 15 வடைகள் வரை வரும்.

உருளைக்கிழங்கு பொரியல்

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
  2. மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
  3. மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையானஅளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. பெரிய வெங்காயம் - 1/2
  3. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. உருளைகிழங்கை தோல் உரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் வெட்டிவைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
  3. கிழங்கு பொன்னிறமானதும் மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
  4. பிறகு அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலையைப் போட்டு பொரித்து உருளைக்கிழங்கு துண்டுகள் மேல் பரப்பி விடவும்.
குறிப்புக்கள் -
  1. நான்-ஸ்டிக் கடாய் வைத்து ப்ரை பண்ணினால் அடிப்பிடிக்காமல் நன்றாக வரும்.

Thursday, April 25, 2013

கத்தரிக்காய் பொரியல்



பரிமாறும்அளவு - 3 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. கத்தரிக்காய் - 1/4 கிலோ
  2. தக்காளி - 1 (சிறியது)
  3. மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
  4. சாம்பார் பொடி - 1/2 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு                                      
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது
  6. மல்லித் தழை - சிறிது
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். கத்தரிக்காயையும் சிறிய  துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.           
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  3. தக்காளி வதங்கியதும் கத்தரிக்காய், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வதக்கவும். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை சிம்மில் வைத்து காய் நன்கு வேகும் வரை வதக்கவும். 
  4. காய் வெந்ததும் சாம்பார் பொடி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறுதியில் மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். கத்திரிக்காய் பொரியல் ரெடி. இது சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

எள்ளுத் துவையல் / Ellu Thuvaiyal

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையானபொருள்-
  1. எள் - 100 கிராம்
அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 3
  2. புளி - நெல்லிக்காய் அளவு
  3. பூண்டு - 4 பல்
  4. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
  5. கறிவேப்பிலை - சிறிது
  6. உப்பு - தேவையானஅளவு
செய்முறை -
  1. அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் எள்ளைப் போட்டு மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுத்து ஆற விடவும்.
  2. நன்கு ஆறியதும் அரைக்க கொடுத்துள்ள பொருள்களோடு சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு, பின் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். சுவையான எள்ளுத் துவையல் ரெடி. சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

புடலைங்காய் பொரியல்

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. புடலைங்காய் - 1/4 கிலோ
  2. வறுத்த வேர்க்கடலைப் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
  3. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1/2
  5. பச்சை மிளகாய் - 2
  6. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. புடலைங்காய், வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். வேர்க்கடலைப் பருப்பை மிக்ஸ்யில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
  3. வெங்காயம் பாதி வதங்கியதும் புடலங்காய், உப்பு சேர்த்து  மிதமான சூட்டில் வைத்து காய் வேகும் வரை நன்கு வதக்கவும்.
  4. காய் வெந்ததும் வேர்க்கடலைப் பொடியை தூவி ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

புடலைங்காய் முட்டை பொரியல்




பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. புடலைங்காய் - 1/4 கிலோ
  2. முட்டை - 1
  3. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் - 2
  5. உப்பு - தேவையான அளவு                             
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1/2
  5. கறிவேப்பிலை - சிறிது                            
செய்முறை -
  1. புடலைங்காய், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி உதிரியாக வந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும்.
  3. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் புடலைங்காய், உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கவும். காய் வெந்ததும் பொரித்து வைத்த முட்டையையும் மிளகுத்தூளையும் போட்டு ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். புடலைங்காய் முட்டை பொரியல் ரெடி.

பூரிக் கிழங்கு


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உருளைக் கிழங்கு - 3 (சிறியது)
  2. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. கரம் மசாலா பொடி - 1/2 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
    1. தக்காளி - 1 (சிறியது)
    தாளிக்க -
    1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    2. கடுகு - 1/2 தேக்கரண்டி
    3. வெங்காயம் - 1/2
    4. கறிவேப்பிலை - சிறிது
    செய்முறை -
    1. தக்காளியை மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
    2. குக்கரில் உருளைக்கிழங்கை 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை எடுத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
    3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
    4. வெங்காயம் பொன்னிறமானதும், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
    5. பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மசாலா வாசனை அடங்கியதும் அரைத்த தக்காளியை சேர்த்து கொதிக்க விடவும்.
    6. நன்றாக கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான பூரிக் கிழங்கு ரெடி.

    உருளைக்கிழங்கு ப்ரை



    பரிமாறும் அளவு - 2 நபருக்கு

    தேவையான பொருள்கள் -
    1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
    2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
    3. சிக்கன் 65 பொடி - 4 மேஜைக்கரண்டி
    4. உப்பு - தேவையான அளவு
    தாளிக்க -
    1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
    செய்முறை -
    1. உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
    2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு மிதமான சூட்டில் வைத்து வதக்கவும். 5 நிமிடங்கள் ஆனதும் அடுப்பை சிம்மில் வைத்து கிழங்கு பொன்னிறமாகும்  வரை நன்கு வதக்கவும்.
    3. கிழங்கு பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
    4. பின் சிக்கன் 65 தூளைப் சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சிக்கன் 65 பொடியில் உப்பு சேர்ந்திருப்பதால் உப்பு சேர்க்க அவசியமில்லை. குறைவாக உப்பு இருந்தால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான உருளை ப்ரை ரெடி. உருளை ப்ரை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    உளுந்து சட்னி



    பரிமாறும் அளவு - 2 நபருக்கு

    தேவையான பொருள்கள் -
    1. தேங்காய் துருவல் - 1 சிறிய கப்  (100 கிராம்)
    2. உளுந்தம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
    3. மிளகாய் வத்தல் - 2
    4. தக்காளி - 1/2
    5. பூண்டுப் பல் - 3
    6. உப்பு - தேவையான அளவு                                  
    தாளிக்க -
    1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    2. கடுகு - 1 தேக்கரண்டி
    3. சின்ன வெங்காயம் - 4
    4. கறிவேப்பிலை - சிறிது
    செய்முறை -
    1. அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் தேங்காய் துருவலை போட்டு லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.                                       
    2. அதே கடாயில் உளுந்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.
    3. பிறகு கடாயில் மிளகாய் வத்தலை போட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.
    4. கடைசியாக கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தக்களியை போட்டு நன்கு சுருள வதக்கிக் கொள்ளவும்.
    5. வறுத்த எல்லாப் பொருள்களுடன் பூண்டுப் பல் உப்பும்  சேர்த்து மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும்.   
    6. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான உளுந்து சட்னி ரெடி. இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    சப்பாத்தி குருமா

     

    பரிமாறும் அளவு - 2 நபருக்கு

    தேவையான பொருள்கள் -
    1. கேரட் - 100 கிராம் 
    2. பீன்ஸ் - 100 கிராம் 
    3. காய்ந்த பட்டாணி - 50 கிராம் 
    4. உருளைக்கிழங்கு - 1
    5. தக்காளி - 1
    6. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
    7. மல்லித் தூள் -2 மேஜைக்கரண்டி
    8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    9. உப்பு - தேவையான அளவு
    அரைக்க -
    1. தேங்காய் -3 மேஜைக்கரண்டி
    2. சோம்பு - 1 தேக்கரண்டி
    3. பூண்டு - 3 பல்
    4. இஞ்சி - 1 இன்ச் அளவு
    தாளிக்க -
    1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    2. பட்டை - 1 இன்ச் அளவு
    3. கிராம்பு - 1
    4. லவங்கம் - பாதி
    5. பெரிய வெங்காயம் - 1
    6. கறிவேப்பிலை - சிறிது
    செய்முறை -        
    1. காய்ந்த பட்டாணியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பின் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். தக்காளியை பொடிதாக நறுக்கி வைக்கவும். கேரட், உருளைக்கிழங்கு, பீன்சை பொடிதாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
    2. கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை குக்கரில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை நன்கு வடித்து வைத்துக் கொள்ளவும்.
    3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, லவங்கம் போட்டு தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளியைப் போட்டு நன்கு சுருள வதக்கவும். 
    4. பின் வேக வைத்த காய்கள், பட்டாணியுடன், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி 300 மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து குருமா கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சப்பாத்தி குருமா ரெடி.

    Wednesday, April 24, 2013

    சேப்பக்கிழங்குபுளிக் கூட்டு


    பரிமாறும் அளவு - 2 நபருக்கு

    தேவையான பொருள்கள் -
    1. சேப்பக்கிழங்கு - 5
    2. சாம்பார் பொடி - 1/2 மேஜைக்கரண்டி
    3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    4. உப்பு - தேவையான அளவு
    5. புளி - நெல்லிக்காய் அளவு                        
    அரைக்க -
    1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
    2. சின்ன வெங்காயம் - 4
    தாளிக்க -
    1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    2. கடுகு - 1 தேக்கரண்டி
    3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    4. சின்ன வெங்காயம் - 3
    5. கறிவேப்பிலை - சிறிது
    செய்முறை -
    1. புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும்.
    2. குக்கரில் 1 1/2 கப் தண்ணீர் மற்றும் சேப்பங்கிழங்கை போட்டு அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். 5 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து கிழங்கை எடுத்து சிறிது நேரம் ஆற விடவும். நன்கு ஆறிய பின் தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கி வைக்கவும்.             
    3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
    4. வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை சிம்மில் வைத்து சாம்பார் பொடியைப் போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
    5. பின் புளித் தண்ணீர், சேப்பக்கிழங்கு, உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும். மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.       

    Friday, April 19, 2013

    கூட்டாஞ் சோறு


    பரிமாறும் அளவு - 2 நபருக்கு

    தேவையான பொருள்கள் -
    1. அரிசி - 1 கப் (200 கிராம்)
    2. துவரம்பருப்பு - 75 கிராம்
    3. காயம் - ஒரு சிட்டிகை
    4. முருங்கைக்காய் - 8 துண்டுகள்
    5. கத்தரிக்காய் - 1
    6. வாழைக்காய் - 1 (சிறியது)
    7. கேரட் - 1
    8. உருளைக்கிழங்கு - 1
    9. மாங்காய் - 4 துண்டுகள்
    10. தக்காளி - 1
    11. புளி - நெல்லிக்காய் அளவு
    12. உப்பு - தேவையான அளவு
    13. சாம்பார் பொடி - 3/4 மேஜைக்கரண்டி
    14. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    15. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
    16. கொத்தமல்லித் தழை - சிறிது                    
    தாளிக்க -
    1. கடுகு - 1 தேக்கரண்டி
    2. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    3. சின்ன வெங்காயம் - 4
    4. கறிவேப்பிலை - சிறிது                                   
    செய்முறை -
    1. முதலில் புளியை 1 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் அனைத்து காய்களையும் நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும்.                                                 
    2. குக்கரில் அரிசி, பருப்பு, நறுக்கிய காய்கறிகள், தக்காளி, சாம்பார்பொடி, மஞ்சள்தூள், உப்பு, காயம், புளித் தண்ணீர் மற்றும் 3 கப் தண்ணீர் (மொத்தமாக 4 கப்) ஊற்றி நன்றாக கிளறி மூடிபோட்டு அடுப்பில் வைக்கவும்.
    3. முதல் விசில் வந்ததும் சிம்மில் வைத்து 12 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்கு கிளறி விடவும். இறுதியில் கொத்தமல்லித் தழையையும், தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறவும்.                        
    4. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை, வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொவன்றாக போட்டு தாளித்து சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி வைக்கவும். சுவையான கூட்டாஞ் சோறு ரெடி. கூட்டாஞ் சோறு கூட அப்பளம் வைத்து பரிமாறலாம்.

    கொத்தமல்லித் துவையல்

    பரிமாறும் அளவு - 3 நபருக்கு

    தேவையான பொருள்கள் -
    1. மல்லித் தழை - 2 கப்
    அரைக்க -
    1. மிளகாய் வத்தல் - 2
    2. புளி - நெல்லிக்காய் அளவு
    3. பூண்டுப் பல் - 3
    4. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
    5. உப்பு - தேவையான அளவு
    6. கறிவேப்பிலை - சிறிது
    தாளிக்க -
    1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    2. கடுகு - 1 தேக்கரண்டி
    3. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    4. கறிவேப்பில்லை - சிறிது
    செய்முறை -
    1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மல்லித் தழையை சிம்மில் வைத்து வதக்கவும். லேசாக வதக்கி மல்லி சுருங்கியதும் இறக்கி விடவும். 
    2. வதக்கிய மல்லித் தழையுடன் அரைக்க கொடுத்தவற்றை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.
    3. அதே கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து துவையலுடன் சேர்க்கவும்.
    4. சுவையான கொத்தமல்லித் துவையல் ரெடி. இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    Wednesday, April 17, 2013

    நெய்க் கடலை



    தேவையான பொருள்கள் -
    1. கடலைப்பருப்பு - 1/4 கிலோ  
    2. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
    3. நெய் -2 மேஜைக்கரண்டி
    4. உப்பு  - தேவையான அளவு
    5. ரிபைண்டு எண்ணெய் - 200 மில்லி
    செய்முறை -
    1. முதலில் கடலைப் பருப்பை 5 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை நன்கு வடித்து விட்டு ஒரு தட்டில் போட்டு 15 நிமிடங்கள் வரை  நன்கு உலர விடவும்.
    2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் உலர வைத்த பருப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்து எண்ணையில் போட்டு மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல்  பொரித்து எடுக்கவும். பிறகு எண்ணெயிலிருந்து எடுத்து டிஷ்யூ பேப்பர் போட்ட தட்டில் பரப்பவும். மீதமுள்ள பருப்புகளையும் இதே போல் பொரித்து எடுக்கவும்.
    3. 15 நிமிடங்கள் கழித்து, டிஷ்யூ பேப்பரை அகற்றி விட்டு மிளகாய்த்தூள், நெய், உப்பு போட்டு கிளறி காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
    குறிப்புகள் -
    1. நெய், காரம் இவை இரண்டையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூட்டியோ, குறைத்தோ கொள்ளலாம்.      

    அவரைக்காய் பொரியல்



    பரிமாறும் அளவு - 2 நபருக்கு

    தேவையான பொருள்கள் -
    1. அவரைக்காய் - 150 கிராம்
    2. துவரம் பருப்பு - 3 மேஜைக்கரண்டி
    3. சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
    4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    5. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
    6. உப்பு - தேவையான அளவு                                                     
    தாளிக்க -
    1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
    2. கடுகு - 1 தேக்கரண்டி
    3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    4. பெரிய வெங்காயம் - 1/2
    5. கறிவேப்பிலை - சிறிது
    செய்முறை -
    1. துவரம் பருப்பை 50 மில்லி தண்ணீரில் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். அவரைக்காயையும், வெங்காயத்தையும் பொடிதாக நறுக்கி கொள்ளவும்.                                  
    2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும். 
    3. வெங்காயம் பாதி வதங்கியதும் அவரைக்காய், ஊற வைத்த பருப்புத் தண்ணீர், பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.                                                                
    4. காய் நன்கு வெந்தவுடன் சாம்பார் பொடி சேர்த்து 1 நிமிடம் வரை நன்கு கிளறி தேங்காய் துருவலை போட்டு கிளறி இறக்கி விடவும். அவரைக்காய் பொரியல் ரெடி.

    Tuesday, April 16, 2013

    வெங்காய சாம்பார்


    பரிமாறும் அளவு - 2 நபருக்கு

    தேவையான பொருள்கள் -
    1. துவரம் பருப்பு - 50 கிராம்
    2. சின்ன வெங்காயம் - 15
    3. தக்காளி - 1
    4. சாம்பார் பொடி - 1/2 மேஜைக்கரண்டி
    5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    6. புளி - நெல்லிக்காய் அளவு
    7. காயம் - 1/2 தேக்கரண்டி
    8. மல்லித்தழை - சிறிது 
    9. உப்பு - தேவையான அளவு                            
    அரைக்க -
    1. தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
    தாளிக்க -
    1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    2. கடுகு - 1 தேக்கரண்டி
    3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    4. சின்ன வெங்காயம் - 4
    5. கறிவேப்பிலை - சிறிது                                                           
    செய்முறை -
    1. புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். 
    2. தாளிக்க கொடுத்துள்ள சின்ன வெங்காயத்தை மட்டும் சிறிதாக நறுக்கி கொள்ளவும். மீதமுள்ள சின்ன வெங்காயத்தை நறுக்க தேவையில்லை. தேங்காயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.                     
    3. குக்கரில் துவரம் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணீர், காயம் சேர்த்து அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
    4. அடுப்பில் கடாய் வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.  
    5. அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.                    
    6. ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளித் தண்ணீருடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.        
    7. கடைசியாக வேக வைத்த பருப்பை சேர்த்து கொதி வந்ததும் சிறிது மல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
    8. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தை  போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு பொன்னிறமானதும் எடுத்து குழம்பில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.   வெங்காய சாம்பார் ரெடி. 

    Saturday, April 13, 2013

    வாழ்த்துக்கள்

    இனிய தமிழ் புத்தாண்டு/ சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் !!!!!!


    புத்தாண்டு ஸ்பெஷல் -

    வாழைக்காய் வதக்கல் / Raw Banana Fry


    பரிமாறும் அளவு - 2 நபருக்கு

    தேவையான பொருள்கள் -
    1. வாழைக்காய் - 1
    2. தக்காளி - 1/2
    3. பூண்டுப் பல் - 1
    4. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
    5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    6. உப்பு - தேவையான அளவு
    தாளிக்க -
    1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    2. கடுகு - 1 தேக்கரண்டி
    3. வெங்காயம் - 1/2
    4. கறிவேப்பிலை - சிறிது
    செய்முறை -
    1. முதலில் வாழைக்காயை தோல் சீவி, நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
    2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
    3. வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கவும்.
    4. பின்னர் வாழைக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.
    5. வாழைக்காய் நன்றாக வெந்ததும் மிளகாய்த் தூள் போட்டு 1 நிமிடம் வரை கிளறி இறக்கி விடவும். சுவையான வாழைக்காய் வதக்கல் ரெடி. இந்த வாழைக்காய் வதக்கல் சாத வகைககளுக்கு ஏற்ற சைடு டிஷ்.
    Related Posts Plugin for WordPress, Blogger...