Thursday, June 20, 2013

தக்காளி பச்சடி


பரிமாறும் அளவு - 2 நபருக்கு                                                                        

தேவையான பொருள்கள் -
  1. நன்கு பழுத்த தக்காளி - 3
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  3. சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு                                                         
அரைக்க -
  1. தேங்காய் -2 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 4
  3. பச்சை மிளகாய் - 2
  4. சீரகம் - 1 மேஜைக்கரண்டி                                              
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. தக்காளியை சிறியதாக நறுக்கி வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை  வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு நன்கு சுருள வதக்கவும்.                                                 
  3. தக்காளி வதங்கியதும் அரைத்த கலவை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். 5 நிமிடம் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆற விடவும்.                                                           
  4. ஆறிய பின் தக்காளி கலவையை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கலவையில் ஊற்றவும். சுவையான பச்சடி ரெடி. இது இட்லி, தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...