Tuesday, September 24, 2013

சிக்கன் குழம்பு / Chicken Curry

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சிக்கன் - 300 கிராம் 
  2. தக்காளி - 1
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு
  5. கொத்தமல்லி தழை - சிறிது
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. கொத்தமல்லி - 4 மேஜைக்கரண்டி 
  3. பெருஞ் சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. பட்டை - 1 இன்ச் அளவு 
  5. கிராம்பு - 2
  6. இஞ்சி - 1 இன்ச் அளவு 
  7. பூண்டு - 4 பல் 
  8. தேங்காய் - 50 கிராம் 
  9. சின்ன வெங்காயம் - 7
   தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - சிறிய துண்டு 
  3. கிராம்பு - 1
  4. வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. முதலில் சிக்கனை  சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக் கொள்ளவும்.
  2. தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். மிதமான தீயில் வைத்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்.
  4. வறுத்தவற்றை ஆறியதும் மிக்ஸ்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  6. தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
  7. பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். சிக்கன் பாதி வெந்ததும் 300 மில்லி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி குக்கரை மூடி விடவும்.
  8. நீராவி வந்ததும் வெயிட் போடவும். 4 விசில் வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும். அல்லது உங்கள் குக்கருக்கு ஏற்ப விசில் விட்டு இறக்கவும்.
  9. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து குழம்பை பாத்திரத்திற்கு மாற்றி விடவும். கொத்தமல்லி தழையை சேர்த்து கலக்கி விடவும். சுவையான சிக்கன் குழம்பு ரெடி.
குறிப்புகள் -
  1. எலும்போடு இருக்கும் சிக்கன் துண்டகள் தான் குழம்பிற்கு நல்ல ருசியை கொடுக்கும்.

Friday, September 20, 2013

பொட்டுக்கடலை துவையல்/ Fried Gram thuvaiyal


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

அரைக்க -  
  1. பொட்டுக்கடலை - 100 கிராம்
  2. பச்சை மிளகாய் - 2
  3. புளி - பாக்கு அளவு
  4. பூண்டுப் பல் - 3
  5. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  6. கறிவேப்பிலை - சிறிது
  7. உப்பு - தேவையானஅளவு                             
செய்முறை -
  1. பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டுப் பல், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். 
  2. பின்னர் லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுத்து வைக்கவும். பொட்டுக்கடலை துவையல் ரெடி.
குறிப்புக்கள் -
  1. தண்ணீர்  அதிகமாக ஊற்ற கூடாது. எனவே தண்ணீரை தெளித்து அரைக்கவும்.

பலாக்கொட்டை சாம்பார்




பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம் பருப்பு - 100 கிராம்
  2. பலாக் கொட்டை - 10
  3. தக்காளி - 1
  4. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. காயம் - 1/4 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் - 1
  8. புளி - நெல்லிக்காய் அளவு
  9. உப்பு - தேவையான அளவு 
  10. மல்லித்தழை - சிறிது                          
                            


















அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 4
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  5. கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை -
  1. தக்காளி, மிளகாய் மற்றும் பலாக்கொட்டையை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். புளியை 200 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் பருப்பு, பலாக்கொட்டை, காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, பலாக்கொட்டை, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து  கொதிக்க விடவும் .
  4. மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை  சேர்த்து 5 நிமிடம்  கொதிக்க விடவும். 
  5. தேங்காய் வாடை போனதும் அவித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து  கொதி வந்ததும் மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, சீரகம், வெங்காயம்  ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து  நன்றாக கலக்கி  விடவும். சுவையான பலாக்கொட்டை சாம்பார் ரெடி .

பட்டர்பீன்ஸ் குழம்பு

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பட்டர் பீன்ஸ் - 100 கிராம்
  2. உப்பு - தேவையானஅளவு
அரைக்க -
  1. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  2. மல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி
  3. சீரகத் தூள் -1 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  6. பூண்டு - 4 பல்
  7. பட்டை - ஒரு இன்ச் அளவு
  8. கிராம்பு - 2
  9. தேங்காய்துருவல் - 4 மேஜைக்கரண்டி
  10. வெங்காயம் - 1/4
  11. பழுத்த தக்காளி - 1                                       
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  4. வெங்காயம் - 1/4
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. ஒரு பாத்திரத்தில் பட்டர்பீன்ஸ், சிறிது உப்பு மற்றும் முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். குக்கரில் வைத்தால் குழைந்து விடும்.
  2. மிக்சியில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு எல்லாவற்றையும் சேர்த்து லேசாக தண்ணீர் விட்டு நல்ல மையாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. பின்னர் தேங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து மிக்சியில் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து என்னை ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
  5. கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும்.
  7. ஒரு நிமிடம் கழித்து வேக வைத்திருக்கும் பட்டர்பீன்ஸ், ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  8. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். உப்பு சரி பார்த்துக் கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
  9. குழம்பு கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி விடவும். இதனை சாதம், சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Wednesday, September 18, 2013

சப்பாத்தி/ Chapathi

                                                                 
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கோதுமை மாவு - 1/4 கிலோ
  2. பால் - 100 மில்லி
  3. தண்ணீர் - தேவையான அளவு
  4. உப்பு - தேவையான அளவு
  5. எண்ணெய் - 50 மில்லி
செய்முறை -
  1. தேவையான அளவு தண்ணீரை லேசாக சுட வைத்துக் கொள்ளவும். கை பொறுக்கும் அளவுக்கு சூடாக்கவும். பால் மிதமான சூட்டில் அல்லது ஆறிய பாலாக இருக்க வேண்டும்.
  2. வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. பிறகு பாலை ஊற்றி கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீரை ஊற்றி மாவை நன்றாக பிசைந்து உருட்டிக் கொள்ளவும். 
  4. கடைசியாக ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி லேசாக பிசைந்து ஈரத் துணியால் மூடி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  5. மாவை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே போல் உருட்டிக் கொள்ளவும்.
  6. ஒரு உருண்டையை எடுத்து பூரிக் கட்டையால் தேய்க்கவும். சிறிது கோதுமை மாவை இருபுறமும் தடவி தேய்க்கவும்.                                                                                 
  7. அடுப்பில் சப்பாத்திக் கல்லை வைத்து சூடானதும் சப்பாத்தியை போடவும். ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். சிவந்து வரும் போது சுற்றி எண்ணெய் விடவும்.             
  8. சப்பாத்தி நன்கு வெந்ததும் எடுத்து விடவும். சுவையான சப்பாத்தி ரெடி. 

அவரை முட்டை பொரியல்/ Broad beans & egg fry

                                                          .
 
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அவரைக்காய் - 150 கிராம்
  2. முட்டை - 1
  3. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி


தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1
  5. பச்சை மிளகாய் - 2
  6. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. அவரைக்காயை பொடிதாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும்  பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.                                           
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் வெட்டி வைத்துள்ள அவரைக்காய், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.
  4. காய் நன்கு வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும். முட்டை வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.

Wednesday, September 11, 2013

அரைக்கீரை பருப்புக் கூட்டு / Araikeerai Paruppu Kootu

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. அரைக் கீரை - 4 கப்
  2. பாசிப் பருப்பு - 100 கிராம்
  3. காயம் - சிறிது
  4. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 4
  3. தக்காளி -1 சிறியது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. வெங்காயம் - 1/4
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. முதலில் கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தமாக கழுவி வைக்கவும். கழுவிய கீரையை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, காயம், மஞ்சள் தூள் சேர்த்து முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பருப்பு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  3. அதே பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாடை போனதும் கீரையை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறி விடவும்.
  4. பிறகு வேக வைத்த பருப்பு, தேங்காய் விழுது எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். கூட்டு கெட்டியானதும் இறக்கி விடவும்.
  5. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமானதும் கீரையில் சேர்க்கவும். சுவையான கீரை பருப்புக்கூட்டு ரெடி.

Friday, September 6, 2013

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !!!!!!

       

                  

                           சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபி -

                                      மோதக கொழுக்கட்டை
                                      சேமியா பாயசம்

சேமியா பாயசம்


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சேமியா - 100 கிராம்
  2. பால் - 200 மில்லி
  3. ஜவ்வரிசி - 75 கிராம்
  4. சர்க்கரை - 200 கிராம்
  5. முந்திரிப் பருப்பு - 10
  6. காய்ந்த திராட்சை - 10
  7. ஏலக்காய் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  8. நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். 
  2. அதே கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும் .
  3. ஜவ்வரிசியை அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் 100 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக விடவும். 
  5. நன்கு வெந்ததும் சேமியா, பால் சேர்த்து சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
  6. இரண்டு நிமிடம் ஆனதும் சரக்கரையை சேர்த்து கரையும் வரை நன்றாக கலக்கவும்.
  7. பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பவுடர் எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சேமியா பாயசம் ரெடி.
குறிப்புகள் -
  1. சேமியா பாயசத்தை அதே பாத்திரத்தில் வைத்திருந்தால் இறுகி விடும். எனவே வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

மோதக கொழுக்கட்டை

தேவையானபொருள்கள் -
  1. பச்சரிசி மாவு - 1 கப் ( 200 ) கிராம்
  2. கடலைப்பருப்பு - 100 கிராம்
  3. வெல்லம் (பொடித்தது) - 100 கிராம்
  4. தேங்காய் துருவல் - 100 கிராம்
  5. ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. உப்பு - 1/4 தேக்கரண்டி
  7. நெய் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. முதலில் கடலைப்பருப்பை நன்றாக கழுவி அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் பருப்பு மற்றும் தண்ணீரை குக்கரில் வைத்து 2 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. நீராவி அடங்கியதும் தண்ணீரை நன்கு வடித்து பருப்பை சிறிது நேரம் ஆறவிடவும்.
  3. ஆறியதும் பருப்புடன் தேங்காய் துருவலையும் சேர்த்து கரகரப்பாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்து பொடித்த வெல்லத்துடன் 25 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
  5. வடிகட்டிய பாகை மீண்டும் அதே பாத்திரத்தில் கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு மேஜைக்கரண்டி நெய், பருப்புக்கலவை, ஏலக்காய்தூள் சேர்த்து பூரணம் கெட்டியாகும் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பூரணம் ரெடி.
  6. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 1/4கப் தண்ணீர், உப்பு, ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  7. கொதித்த வெந்நீரை அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பின்புறத்தால் நன்கு கிளறவும். மாவு கட்டி இல்லாமல் கொஞ்சம் தளர்வாக இருக்க வேண்டும். மேல் மாவு ரெடி.
  8. பெரிய எலுமிச்சை அளவுக்கு மாவை எடுத்து தட்டி நடுவில் பூரணத்தை வைத்து மாவை மூடி விட வேண்டும்.
  9. மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்து வைத்துக் கொள்ளவும்.
  10. இட்லி பாத்திரத்தில் கொழுக்கட்டைகள வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். மோதக கொழுக்கட்டை ரெடி.

Thursday, September 5, 2013

கேரட் அல்வா / Carrot Halwa

தேவையான பொருள்கள் -
  1. கேரட் - 2
  2. சீனி - 1/2 கப் 
  3. பால் - 1/2 கப் 
  4. நெய் - 1/4 கப் 
  5. கேசரி கலர் - சிறிது 
  6. ஏலக்காய் பவுடர் - சிறிது 
  7. முந்திரிப்பருப்பு - 10
செய்முறை -
  1. முதலில் கேரட்டை தோலுரித்து துருவியில் வைத்து நன்றாக துருவிக் கொள்ளவும். 
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. அதே கடாயில் பாலை ஊற்றி கேரட்டை போட்டு வேக விடவும். பால் நன்றாக வற்றும் வரை கிளறவும்.
  4. கேரட் வெந்ததும் சீனியும், கேசரி கலரும்  சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. சர்க்கரை கரைந்து நன்கு சுருள வதங்கியதும் நெய்யை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். இறுதியில் முந்திரிப் பருப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான கேரட் அல்வா ரெடி.

பில்டர் காபி /Filter coffee

                                                          

பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பால் - 1/2 லிட்டர்
  2. காப்பித்தூள் - 4 மேஜைக்கரண்டி
  3. காபி பில்டர்
  4.  சர்க்கரை - தேவையான அளவு                
செய்முறை -
  1. பில்டரின் மேல் பாகத்தில் 1/2 மேஜைக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 மேஜைக்கரண்டி காப்பித்தூளை போட்டு நன்றாக அமுக்கிவிடவும்.                                                                             
  2. ஒரு கப் ( 200 மில்லி ) தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து காப்பித்தூளின் மேல் மெதுவாக ஊற்றவும். 15 நிமிடங்களில் பில்டரின் கீழ் பாகத்தில் டிகாஷன் இறங்கி விடும்.
  3. பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
  4. 150 மில்லி பால், 25 மில்லி டிகாஷன் என்ற அளவில் கலந்து தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து நுரை வர ஆற்றி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
குறிப்புகள்  -
  1. இரண்டு வகையான பில்டர் காப்பித்தூள்களை வாங்கி ஒன்றாக கலந்து ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இதை வைத்து செய்தால் காபி நல்ல சுவையாக இருக்கும்.
  2. காபி ஒரிஜினல் சுவையில் வேண்டுமென்றால் அன்று கறந்த பாலில் தயாரிக்கவும்.
  3. பாலை அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. ஒரு கொதி வந்தாலே போதும்.

Wednesday, September 4, 2013

தேங்காய் கடலைப்பருப்பு சட்னி


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. தேங்காய் துருவல் - 2 கப் ( 400 கிராம் )
  2. கடலைப்பருப்பு - 3 மேஜைக்கரண்டி
  3. மிளகாய் வத்தல் - 3
  4. இஞ்சி -1 இன்ச்
  5. உப்பு - தேவையானஅளவு                          
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. வெங்காயம் - 1/4
  5. கறிவேப்பிலை - சிறிது                                    
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பைப் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.
  2. நன்கு ஆறியவுடன் தேங்காய்துருவல், மிளகாய் வத்தல், இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு  வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் சட்னியை கடாயில் ஊற்றி அடுப்பை ஆப் பண்ணி விடவும். கொதிக்க வைக்க கூடாது. சட்னியை கலக்கி விட்டு வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். தேங்காய் கடலைப்பருப்பு சட்னி ரெடி.

கோஸ் பருப்பு உசிலி


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. கோஸ் - 1/4 கிலோ
  2. துவரம் பருப்பு - 25 கிராம்
  3. கடலைப் பருப்பு - 25 கிராம்
  4. மிளகாய் வத்தல் - 2
  5. காயம் - சிறிது
  6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது                                   
செய்முறை -
  1. கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் இரண்டையும் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து காயம் சேர்த்து  மிக்ஸ்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.         
  2. அரைத்த பருப்பை இட்லித் தட்டில் 10 நிமிடம் வைத்து வேக வைத்து கொள்ளவும்.      
  3. ஒரு பாத்திரத்தில் கோஸ், உப்பு மற்றும் கோஸ் முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பருப்பை போட்டு 1 நிமிடம் கிளறவும்.
  5. பின்னர் வேக வைத்துள்ள கோஸை, சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  6. கோஸ் பருப்பு உசிலி ரெடி. மோர் குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...