Friday, September 20, 2013

பட்டர்பீன்ஸ் குழம்பு

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பட்டர் பீன்ஸ் - 100 கிராம்
  2. உப்பு - தேவையானஅளவு
அரைக்க -
  1. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  2. மல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி
  3. சீரகத் தூள் -1 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  6. பூண்டு - 4 பல்
  7. பட்டை - ஒரு இன்ச் அளவு
  8. கிராம்பு - 2
  9. தேங்காய்துருவல் - 4 மேஜைக்கரண்டி
  10. வெங்காயம் - 1/4
  11. பழுத்த தக்காளி - 1                                       
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  4. வெங்காயம் - 1/4
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. ஒரு பாத்திரத்தில் பட்டர்பீன்ஸ், சிறிது உப்பு மற்றும் முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். குக்கரில் வைத்தால் குழைந்து விடும்.
  2. மிக்சியில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு எல்லாவற்றையும் சேர்த்து லேசாக தண்ணீர் விட்டு நல்ல மையாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. பின்னர் தேங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து மிக்சியில் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து என்னை ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
  5. கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும்.
  7. ஒரு நிமிடம் கழித்து வேக வைத்திருக்கும் பட்டர்பீன்ஸ், ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  8. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். உப்பு சரி பார்த்துக் கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
  9. குழம்பு கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி விடவும். இதனை சாதம், சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...