Wednesday, February 26, 2014

தேங்காய் தக்காளி சட்னி / Coconut Tomato Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -

அரைக்க -
  1. தேங்காய் துருவல் - ஒரு சிறிய கப் ( 100 கிராம் )
  2. மிளகாய் வத்தல் - 2
  3. தக்காளி - 1 சிறியது 
  4. உப்பு - தேவையான அளவு                        
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அரைக்க கொடுத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி அடுப்பை அணைக்கவும். சுவையான சட்னி ரெடி.                                     

Tuesday, February 25, 2014

சீனிக்கிழங்கு ப்ரை / Sweet Potato Fry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சீனிக்கிழங்கு - 150 கிராம் 
  2. மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு                        
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பெரிய வெங்காயம் - 1
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. சீனிக்கிழங்கை தோலுரித்து பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக வெட்டி வைக்கவும்.                                 
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை, கறிவேப்பில்லை போட்டு வதக்கவும். 
  3. வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை சிம்மில் வைத்து வெட்டி வைத்துள்ள சீனிக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.                
  4. கிழங்கு நன்றாக வெந்து சிவந்து வரும் போது மிளகாய்தூளை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்.                           
  5. சுவையான சீனிக்கிழங்கு ப்ரை ரெடி. சாம்பார் சாதம், புளிக் குழம்புசாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் பரிமாறலாம். மசாலாத்தூள் அவரவர் விருப்பப்படி மாற்றி சேர்த்துக் கொள்ளலாம்.

முருங்கைக்காய் மசால் / Drumstick Masal

           
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முருங்கைக்காய் துண்டுகள் - 25
  2. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  3. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  4. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  5. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. புளி - கோலி அளவு 
  7. உப்பு - தேவையான அளவு                        
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது                              
 அரைக்க -
  1. தேங்காய் - 4 மேஜைக்கரண்டி                 
செய்முறை -
  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முருங்கைக்காய் மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  2. வெந்ததும் தண்ணீரை வடித்து வைக்கவும். புளியை 100 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.                      
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் மிளகாய்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
  5. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, அவித்து வைத்துள்ள முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.     
  6. மசால் கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான முருங்கைக்காய் மசால் ரெடி. சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் பரிமாறலாம்.

Tuesday, February 18, 2014

பூசணிக்காய் கூட்டு / Poosanikai Kootu / Pumpkin Kootu

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பூசணிக்காய் - 150 கிராம் 
  2. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. அச்சு வெல்லம் - சிறிது அல்லது மண்டை வெல்லத்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு                         
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. பச்சை மிளகாய் - 2
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. நறுக்கிய சின்ன வெங்காயம் - 4                
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது                               
செய்முறை -
  1. பூசனிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.                          
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளை போட்டு அதனுடன்  உப்பு, மஞ்சள்தூள், அச்சுவெல்லம் மற்றும் 50 மில்லி தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடவும்.                                                                               
  4. பூசணிக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும்.
  5. கொதி வந்து கூட்டு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான பூசனிக்காய் கூட்டு ரெடி. புளிக்குழம்பு சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

Friday, February 14, 2014

எனது அம்மா - 150 வது பதிவு

என்னுடைய 150 வது பதிவாக எனது அம்மாவைப் பற்றி எழுத ஆசைப்படுகிறேன்.

முதலில் எனது அம்மாவுக்காக ஒரு சின்ன கவிதை,

           அம்மா நீ என்னை தோளிலும் மார்பிலும் சுமந்து
           இந்த உலகத்தை காட்டியவள் நீ!
           என்னை சுற்றி சுழன்று கொண்டிருக்கும்
           மொத்த உலகமும் நீதான் அம்மா !

தாய்ப்பாசம்  என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமான பாசமாகும். அம்மாவுக்கு என் மேல் நிறைய பாசம் உண்டு. எனக்கும் என் அம்மா மேல் நிறைய பாசம் உண்டு. நான் இன்று வரை எல்லா விஷயங்களையும் அம்மாவிடம் பகிர்ந்து கொள்வேன். அப்படி பகிர்ந்து கொண்டால் தான் எனக்கு சந்தோஷமாக இருக்கும்.

எனது திருமணத்திற்கு முன்பு நான் அம்மாவுடன் இருக்கும் போது அவங்க கைப்பக்குவத்தில் செய்த சமையலை சாப்பிட்டு  தான் வளர்ந்தேன். என்னை ஒரு வேலையும் செய்ய விட மாட்டாங்க. நான் எனது திருமணத்திற்கு பிறகு தான் அம்மாவின் சமையல் குறிப்புகளை கேட்டு ஒவ்வொன்றாக வைக்க ஆரம்பித்தேன். எனது வலைப்பூவில் நான் கொடுக்கும் சமையல் குறிப்புகள் அணைத்தும் எங்க அம்மாவிடம் கற்றுக்கொண்டவை தான். இப்போதும் நான் அம்மா வீட்டுக்கு செல்லும் முன் போனில் அம்மாவிடம் நான் வந்து சமையல் பண்ணுகிறேன் என்று சொல்வேன். அம்மாவும் சரி என்று சொல்வாங்க, ஆனால் நான் அங்கு சென்று பார்த்தால் எல்லாம் ரெடி பண்ணி வைத்திருப்பாங்க! சமையலில் அம்மாவின் கைப்பக்குவத்தோடு பாசமும் சேர்ந்து இருக்கும். இப்படி ஒரு அம்மா கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் இப்போதும் ஸ்வீட்ஸ், காரம் என்று எதை செய்தாலும் அதை செய்வதற்கு முன்னால் அம்மாவிடம் பக்குவம் கேட்டுத்தான் செய்வேன். அம்மாவும் பக்குவத்தை சந்தோசமாக சொல்வாங்க. எனக்கு தெரிந்தாலும் அம்மாவிடம் கேட்டு செய்தால் தான் எனக்கு நன்றாக வரும். நான் என் அம்மாவின் சமையலை விரும்புவது போல் அம்மாவும் என்னுடைய சமையலை ரொம்ப விரும்புவாங்க. என் வீட்டிற்க்கும் அம்மா வந்து இரண்டு வாரம் வரை இருப்பாங்க. அப்போது நான் செய்து கொடுக்கும் குழம்பு, பொரியல் வகைகளை விரும்பி சாப்பிடுவாங்க. அது எனக்கு சந்தோசமாக இருக்கும்.

என் அம்மாவுக்கு என்னுடைய மகன், மகள் இருவரிடமும் பாசம் அதிகம் உண்டு, அவங்களும் ஆச்சியிடம் பாசமாக இருப்பாங்க. அவர்கள் இருவரும் என் அம்மாவின் சமையலை ரசித்து ருசித்து சாப்பிடுவாங்க. என் மகனுக்கு என்னுடைய சமையலும், ஆச்சியின் சமையலும் மிகவும் பிடிக்கும். என்னுடைய மகள் ஆச்சியின் சமையலை விரும்பி சாப்பிடுவாள். அவளுக்கு என் அம்மாவின் முருங்கைக்காய் சாம்பார் ரொம்ப பிடிக்கும். இப்போது எனது மகனுக்கும், மகளுக்கும் திருமணம் ஆகி மகனுக்கு ஒரு வயது பெண் குழந்தையும், மகளுக்கு நான்கு வயதில் ஒரு பையனும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கும் என் அம்மாவுக்கும் உள்ள பாசம் அப்படியே தான் இருக்கிறது. இன்னும் எங்க அம்மாவைப் பற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். நம் எல்லோருக்கும் தாய்ப்பாசம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

எனவே நமக்கு எவ்வளவு உறவுகள் இருந்தாலும் தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. எனவே எல்லோரும் தாய்ப்பாசத்தை நல்லா அனுபவிங்க என்று சொல்லி விடை பெறுகிறேன்.
நன்றி
சாரதா,

ஓட்ஸ் லட்டு / Oats Laddu


தேவையான பொருள்கள் -
  1. ஓட்ஸ் - 200 கிராம் 
  2. சர்க்கரை ( சீனி ) - 100 கிராம் 
  3. முந்திரிப் பருப்பு - 10
  4. நெய் - 4 மேஜைக்கரண்டி 
  5. மஞ்சள் புட்கலர் - 1/4 தேக்கரண்டி 
  6. வெந்நீர் - தேவையான அளவு                   
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ஓட்ஸ், முந்திரிப்பருப்பு சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.                                                                
  2. ஆறிய பின் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். புட்கலரை ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் திரித்து வைத்துள்ள ஓட்ஸ் முந்திரிப்பருப்பு தூள், சர்க்கரைத் தூள்,  நெய்,புட்கலரை கரைத்து வைத்துள்ள தண்ணீர் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
  4. லட்டு பிடிக்கும் பதத்திற்கு வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். பதம் சரியாக வந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.        
  5. சுவையான ஓட்ஸ் லட்டு ரெடி.                        

Wednesday, February 12, 2014

டிபன் சாம்பார் / Tiffin Sambar



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பருப்பு - 100 கிராம் 
  2. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  3. உருளைக்கிழங்கு - 1
  4. கேரட் - 1
  5. தக்காளி -1
  6. பச்சை மிளகாய் -1
  7. அச்சு வெல்லம் - சிறிய துண்டு 
  8. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  9. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  10. உப்பு - தேவையான அளவு 
  11. மல்லித்தழை - சிறிது
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, காயத்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டி வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், பச்சை மிளகாய், தக்காளி எல்லாவற்றையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  6. பின்னர் சாம்பார்பொடி, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு தடவை கிளறி அதனுடன் உப்பு, 200 மில்லி தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடவும்.                                 
  7. காய்கள் நன்கு வெந்து மசாலா வாடை அடங்கியதும் அவித்து வைத்துள்ள பருப்பு, வெல்லத் துண்டு சேர்த்து கொதிக்கவிடவும்.
  8. சாம்பாரை சுற்றி நுரை கூடி வரும் போது மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான டிபன் சாம்பார் ரெடி.

Tuesday, February 11, 2014

பீர்க்கங்காய் பாசிப்பருப்புக் கூட்டு / Peerkangai/ Ridge Gourd Kootu

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

 தேவையான பொருள்கள் -
  1. பீர்க்கங்காய் - 150 கிராம் 
  2. பாசிப்பருப்பு - 50 கிராம்   
  3. சாம்பார் பொடி - 2 மேஜைக்கரண்டி (சாம்பார் பொடி பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்)
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. தக்காளி - 1
  6. காயம் - ஒரு சிட்டிகை
  7. உப்பு - தேவையான அளவு
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. வெங்காயம் நறுக்கியது - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. கடாயில் பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன் காயம், மஞ்சள்தூள் சேர்த்து பருப்பு முழ்கும்  அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
  2. பீர்க்கங்காயை தோலுரித்து பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பீர்க்கங்காயில் நீர் சத்து இருப்பதால் 2 நிமிடத்தில் வெந்து விடும்.
  5. வெந்தவுடன் சாம்பார்பொடி சேர்த்து 1 நிமிடம் கிளறி அதனுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, அவித்து வைத்துள்ள பாசிப்பருப்பு இரண்டையும் சேர்க்கவும்.
  7. கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான பீர்க்கங்காய் பாசிப்பருப்பு கூட்டு ரெடி. இந்த கூட்டை ப்ளைன் சாதத்தில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். புளிக்குழம்பு சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

Friday, February 7, 2014

கருணைக்கிழங்கு புளிக்குழம்பு / Karunai Kilangu Pulikulambu

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கருணைக்கிழங்கு - 2
  2. புளிக்குழம்பு பொடி - 3 மேஜைக்கரண்டி ( புளிக்குழம்புபொடி பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்)
  3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  4. காயத்தூள் - சிறிது  
  5. புளி - சின்ன கோலி அளவு 
  6. உப்பு - தேவையான அளவு                     
அரைக்க -
  1. தேங்காய் - 4 மேஜைக்கரண்டி 
  2. சின்ன வெங்காயம் - 6                              
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது                              
செய்முறை -
  1. ஒரு பாத்திரத்தில் கிழங்கு மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கிழங்கை வேக வைக்கவும். 10 நிமிடங்களில் வெந்து விடும்.
  2. கிழங்குகள் வெந்தவுடன் தண்ணீரை வடித்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும். ஆறியபின் கிழங்குகளை தோலுரித்து வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
  3. புளியை 200 மில்லி தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். தேங்காய், வெங்காயம் இரண்டையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
  6. கொதிக்க ஆரம்பித்ததும் புளிகுழம்புபொடி, மஞ்சள்தூள், காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடவும். 
  7. மசாலாவாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, வெட்டி வைத்துள்ள கருணைக்கிழங்கு துண்டுகள் இரண்டையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.                  
  8. குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான கருணைக்கிழங்கு புளிக்குழம்பு ரெடி.                                                                        
Related Posts Plugin for WordPress, Blogger...