Wednesday, March 19, 2014

வெண்டைக்காய் பொரியல் / Okra Stri Fry

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வெண்டைக்காய் - 150 கிராம் 
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு                        
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது                              
செய்முறை -
  1.  வெண்டைக்காய், தக்காளி இரண்டையும் பொடிதாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும்  நறுக்கி வைக்கவும்.                                 
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.
  4. தக்காளி சுருண்டு வரும் போது நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வேகும் வரை நன்கு கிளறவும்.
  5. வெண்டைக்காய் நன்கு வெந்தவுடன் மிளகாய்பொடி, தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். 
  6. சுவையான வெண்டைக்காய் பொரியல் ரெடி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...