Wednesday, June 18, 2014

வாழைக்காய் பஜ்ஜி / Raw Banana Bajji

 தேவையான பொருள்கள் -
  1. வாழைக்காய் -1
  2. கடலைமாவு - 100 கிராம் கப்
  3. அரிசிமாவு - 25 கிராம்
  4. மிளகாய்த்தூள் - 1 மேஜைக்கரண்டி  
  5. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  6. சோடா உப்பு - 1 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. சுடுவதற்கு எண்ணைய் - தேவையான அளவு
செய்முறை -
  1. முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், காயத்தூள், சோடா உப்பு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்து வைக்கவும்.
  2. வாழைக்காயை தோல் சீவி சிப்ஸ் சீவும் பலகையில் வைத்து நீள சைஸில் சீவி வைக்கவும்.

  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து கரைத்து வைத்துள்ள மாவில் சீவி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை முக்கி கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
  4. இரு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து ஒரு வடிதட்டில் அல்லது பேப்பரில் வைக்கவும்.
  5. எண்ணைய் நன்கு உறிஞ்சியவுடன் எடுத்து பரிமாறவும். தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும். சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி. வாழைக்காயை சிறிதாக சீவியும் பஜ்ஜி செய்யலாம்.                                                                   

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...