Tuesday, August 26, 2014

விநாயகர் சதுர்த்தி

                                       

 விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு (2014) ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி வருகிறது.

                                          விநாயகர் துதி

              பாலும், தெளிதேனும், பாகும் பருப்பும் இவை
              நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
              துங்க கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
              சங்கத்தமிழ்  மூன்றும் தா.
 
விநாயகருக்கு பிள்ளையார், கணபதி என்ற பெயரும் உண்டு. பிள்ளையாரை மரத்தடி முதல் மணிமண்டபம் வரை எங்கும் இவரை காணலாம். எப்போதும் எதையும் தொடங்கும் முன் விநாயகரை வழிபட்ட பிறகே தொடங்குவது நம்முடைய வழக்கமாக இருந்து வருகிறது. சதுர்த்தி அன்று ஏழு பிள்ளையார் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் நல்லது என்றும் சொல்வார்கள்.

பிள்ளையாருக்கு பிடித்த உணவு மோதக கொழுக்கட்டையும், சுண்டலும்,கோதுமை அப்பமும் மிகவும் பிடிக்கும். எனவே இந்த நல்ல நாளில் நாம் வீட்டில் மோதக கொழுக்கட்டை,சுண்டல்,கோதுமை அப்பம்  செய்து பிள்ளையாருக்கு படைத்து அவரை வழிபட்டு நாமும் உண்டு இந்த நல்ல நாளில் மகிழ்ச்சியாக இருப்போம். வீட்டிற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கும் சென்று அவரை வணங்கி வருவோம்.

இந்த நல்ல நாளில் எல்லோரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சிறப்பாக கொண்டாட என்னுடைய வாழ்த்துக்கள்!

இன்றைய ஸ்பெஷல் -
  1. மோதக கொழுக்கட்டை 
  2. சுண்டல் 
  3. கடலைப்பருப்பு சுண்டல் 
  4. கோதுமை அப்பம் 

வேம்படி சாஸ்தா கோவிலுக்கு சென்ற அனுபவம்

                               

நான் 4.5.2014 அன்று பால்குளத்தில் உள்ள வேம்படி சாஸ்தா கோவிலுக்கு உறவினர்களோடு சென்று வந்தேன். எங்கள் ஊரான பாளையங்கோட்டையிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு என் அண்ணியின் பேத்திக்கு முடி எடுத்து காது குத்தும் விழா நடந்ததது. எங்களுடைய சொந்தங்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அன்று முழுவதும் நல்ல சந்தோஷமாக பொழுதை கழித்தோம்.

கோவிலில் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தது நாங்களும், மற்றும் உறவினர்கள் அனைவரும் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தோம். வெண்பொங்கலும், சர்க்கரை பொங்கலும் கோவிலில் வைத்து செய்ததால் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருந்தது.

பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலையில் கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். அன்று முழுவதும் எங்கள் மனதில் சந்தோஷம் மட்டுமே நிறைந்து இருந்தது. நான் இந்த சந்தோஷத்தை  உங்கள் எல்லோரிடமும் பகிரிந்து கொண்டதில் எனக்கு இன்று இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்தது.

நன்றி
சாரதா 

Wednesday, August 13, 2014

முள்ளங்கி பொரியல் / Radish Poriyal

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள்
  1. வெள்ளை முள்ளங்கி - 2
  2. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு
  5. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
தாளிக்க -
  1. எண்ணைய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை  - சிறிது 
செய்முறை -
  1. முள்ளங்கியை தோலுரித்து பொடிதாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தையும்  பொடிதாக வெட்டி வைக்கவும்.                                
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். 
  3. கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி, மஞ்சள்தூள், உப்பு, மற்றும் ஒரு கை தண்ணீரும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முள்ளங்கி வேகும் வரை நன்கு கிளறவும்.
  5. முள்ளங்கி நன்கு வெந்தவுடன் மிளகாய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி  உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.                                                   

Friday, August 8, 2014

பாகற்காய் வறுவல் / Bitter Gourd Fry

 பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாகற்காய் - 150 கிராம் 
  2. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
  6. எண்ணைய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 
செய்முறை -
  1. முதலில் பாகற்காயின் விதையை எடுத்து  வட்டவட்டமாக வெட்டி அதன் மீது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.                                        
  2. பாகற்காயில் உப்பு சேர்த்திருப்பதால் சிறிது தண்ணீர் விடும். எனவே பாகற்காயை பிழிந்து தனியே வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு பாகற்காய்களை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் பரப்பி வைக்கவும்.                                                                  
  4. மீதமுள்ள எல்லா பாகற்காய்களையும் இதே முறையில் வறுத்து எடுக்கவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து தாளிக்க கொடுத்துள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணையை ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூளை போட்டு கிளறவும். 
  6. பிறகு வறுத்து வைத்துள்ள பாகற்காயை போட்டு 2 நிமிடம் கிளறி இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.                                                
  7. உப்பு  சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான பாகற்காய் வறுவல் ரெடி.

Saturday, August 2, 2014

வாழைப்பழ பிரட் / Banana Bread

தேவையான பொருட்கள் -
  1. வெண்ணெய் - 1/2 கப்
  2. சர்க்கரை - 1 கப்
  3. முட்டை - 2
  4. வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
  5. பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
  6. ஆல் பர்பஸ் ப்ளோர் - 1 1/2 கப்
  7. உப்பு - 1/2 தேக்கரண்டி
  8. தயிர் - 1/2 கப்
  9. வாழைப்பழம் - 3
செய்முறை -
  1. வெண்ணெய்யை ப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து ரூம் டெம்பரேச்சர்க்கு கொண்டு வரவும். அல்லது லேசாக உருக்கி கொள்ளவும். முட்டை, தயிர் அனைத்தையும் ரூம் டெம்பரேச்சர்க்கு கொண்டு வரவும்.
  2. வாழைப்பழத்தை நன்றாக மசித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆல் பர்பஸ் ப்ளோர், உப்பு, பேக்கிங் சோடா மூன்றையும் ஒரு பௌல்லில் கலந்து வைத்துக் கொள்ளவும். ஓவனை 350 F -ல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.
  3. உருக்கிய வெண்ணெய் மற்றும் சர்க்கரையை ஒரு அகல பௌல்லில் சேர்த்து பீட்டர் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.                                                              
  4. பிறகு முட்டை மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மறுபடி பீட்டர் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.                                                                                     
  5. பிறகு மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைத்துக் கொள்ளவும்.                                                                       
  6. கடைசியாக மசித்து வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும்.                                                                                          
  7. பிரட் பேன்னில் வெண்ணெய்யை நன்றாக தடவி வைக்கவும். பிறகு கலவையை பேன்னில் ஊற்றி சமநிலைப்படுத்தவும்.                                          
  8. ஓவனில் வைத்து 55 - 60 நிமிடம் வரை பேக் செய்யவும். ஒரு குச்சியை நடுவில் குத்தி வெந்து விட்டதா என பார்க்கவும்.               
  9. நன்றாக ஆறியதும் கட் செய்து பரிமாறவும். சுவையான வாழைப்பழ பிரட் ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...