Thursday, September 18, 2014

நவராத்திரி வாழ்த்துக்கள்

       
நவராத்திரி பண்டிகை 9 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வரை வர இருக்கிறது.

எங்கள் ஊரான பாளையங்கோட்டையில் நவராத்திரி விழாவை தசரா என்று சொல்வோம். பாளையில் தசரா பண்டிகை மிகவும் சிறப்பாக இருக்கும். இங்கு 10 அம்மன் கோவில்கள் இருக்கிறது. 9 நாட்களுக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடும் இருக்கும். பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும். சரஸ்வதி பூஜை அன்று எல்லா அம்மனுக்கும் வெள்ளை நிற ஆடையில் அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். சிறுவர்களை மகிழ்விக்க கடை வீதிகள், ராட்டினங்கள் எல்லாம் இருக்கும்.

சில வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள். 9 நாட்களுக்கு விதவிதமான சுண்டல்கள் செய்து கொலு பார்க்க வருபவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். 10 வது நாள் 10 சப்பரங்கள் பாளை மார்கட் மைதானத்தில் வந்து நிற்கும்.

நவராத்திரி பண்டிகையை நாமும் சிறப்பாக கொண்டாடுவோம். உங்கள் அணைவருக்கும் என்னுடைய நவராத்திரி தசரா வாழ்த்துக்கள்.

நவராத்திரி ஸ்பெஷல் -

  1. பாசிப்பயறு சுண்டல் 
  2. கொண்டைக்கடலை சுண்டல் 
  3. தட்டப்பயறு சுண்டல் 
  4. கடலைப்பருப்பு சுண்டல் 
  5. வேர்க்கடலை சுண்டல் 
  6. சர்க்கரைப் பொங்கல் 
  7. புளி சாதம் 
  8. தயிர் சாதம் 
  9. ஈசி தேங்காய் சாதம்

Friday, September 12, 2014

பாசிப் பயறு சுண்டல் / Green gram sundal

தேவையான பொருள்கள் -
  1. பாசிப் பயறு - 100 கிராம் 
  2. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  3. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. மிளகாய் வத்தல் - 1
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் பயறை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் பயறுடன் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்து வேக வைக்கவும்.                     

  2. வெந்தவுடன் நீரை வடித்து விட்டு உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.                                                                   
  3. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் போடவும்.
  4. பிறகு அவித்து வைத்துள்ள பாசிப்பயறு மற்றும் காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பாசிப்பயறு சுண்டல் ரெடி.                                                                      

Monday, September 8, 2014

கரம் மசாலா பொடி/ Garam Masala Powder

தேவையான பொருள்கள் -
  1. பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம் 
  2. பட்டை - 10 கிராம் 
  3. கிராம்பு - 10 கிராம் 
  4. அன்னாசிப்பூ - 10 கிராம் 
  5. ஏலக்காய் - 10 கிராம்                                    
செய்முறை -
  1. எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும். 
  2. அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.
  3. நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் திரிக்கவும்.
  4. பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

முட்டை தொக்கு / Muttai thokku

 பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 4
  2. தக்காளி - 2
  3. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 1
  4. பெரிய வெங்காயம் - 2
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் முட்டைகளை வேக வைத்து கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  4. பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  5. தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். 
  6. அதனுடன் உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாடை நன்றாக அடங்கி கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
  7. வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக கட் செய்யவும் அல்லது நடுவே கீறி கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டைகளை சேர்க்கவும்.
  8. 5 நிமிடம் கழித்து மல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை தொக்கு ரெடி. சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

Monday, September 1, 2014

பருப்பு உருண்டை குழம்பு / Paruppu Urundai Kuzambu

                               
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம்பருப்பு - 50 கிராம் 
  2. கடலைப்பருப்பு - 50 கிராம் 
  3. இட்லி அரிசி - 3 மேஜைக்கரண்டி 
  4. சோம்பு - 1 தேக்கரண்டி
  5. பெரிய வெங்காயம் - 1
  6. தக்காளி - 1
  7. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி 
  8. மல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி 
  9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  10. உப்பு - தேவையான அளவு
  11. தேங்காய் துருவல் - 25 கிராம் 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, இட்லி அரிசி, சோம்பு எல்லாவற்றையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
  2. ஊறிய பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு பருப்போடு சிறிது உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.                                                       
  3. தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும்.
  4. தேங்காயை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவு போட்டு வதக்கவும். 
  6. வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை சிம்மில் வைத்து அரைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.
  7. நன்கு ஆறிய பிறகு சிறுசிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் 10 நிமிடம் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.                                                                           
  8. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு சுருள வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். 
  10. ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும். பருப்பு உருண்டையில் உப்பு சேர்த்திருப்பதால் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  11. மசாலா வாடை அடங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் பருப்பு உருண்டைகளை சேர்த்து ஒரு கொதி வந்தததும் அடுப்பை அணைக்கவும். சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...