Monday, December 21, 2015

பூரி மசாலா / Poori Masala


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 3
  2. தக்காளி - 1
  3. பெரிய வெங்காயம் - 1/2
  4. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  6. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
  10. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1/2
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் குக்கரில் உருளைக்கிழங்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  2. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து உருளைக்கிழங்குகளை சிறிது நேரம் ஆறவிட்டு தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
  3. வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும்.
  4. தேங்காய் துருவல், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவு, தக்காளி எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். 
  7. பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதனுடன் 100 மில்லி தண்ணீர் சேர்க்கவும். 
  8. மசாலா கெட்டியானதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான பூரி மசாலா ரெடி.

Wednesday, December 16, 2015

சோளமாவு அல்வா / Corn Flour Halwa - 300 வது பதிவு

இது  என்னுடைய 300 வது பதிவு. சோளமாவை வைத்து அல்வா எப்படி செய்வதென்று ஒரு ஸ்வீட் பதிவு !
தேவையான பொருள்கள் -
  1. சோளமாவு - 100 கிராம்
  2. சீனி - 200 கிராம்
  3. நெய் - 3 மேஜைக்கரண்டி 
  4. முந்திரிப்பருப்பு - 15
  5. கேசரி கலர் - 1/2 தேக்கரண்டி 
  6. தண்ணீர் - 200 மில்லி 
செய்முறை
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவுடன் 50 மில்லி தண்ணீர் ஊற்றி கட்டி வராதபடி கலக்கி வைக்கவும். பிறகு கேசரி கலர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  2. கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து தனியே வைக்கவும்.
  3. அடுப்பில் அதே நான்ஸ்டிக் கடாயை வைத்து மீதமுள்ள 150 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் சீனியை போடவும். சீனி கரைந்ததும் வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.
  4. அதே நான்ஸ்டிக் கடாயில் சீனிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கலக்கி வைத்துள்ள சோளமாவு கலவையை சேர்த்து 10 நிமிடம் அல்லது அல்வா பதம் வரும் வரை விடாமல் கிளறவும்.
  5. அல்வா பதம் வந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி  நெய், முந்திரிப்பருப்பு இரண்டையும் கலந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான சோளமாவு அல்வா ரெடி. 

Friday, December 4, 2015

இஞ்சி தொக்கு / Ginger Thokku

தேவையான பொருள்கள் -
  1. இஞ்சி - 25 கிராம் 
  2. மிளகாய் வத்தல் - 1
  3. வெல்லத்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  4. புளி - சிறிது 
  5. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
செய்முறை -
  1. இஞ்சியை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி பொடிதாக வெட்டி வைக்கவும். வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி பண்ணிக் கொள்ளவும்.
  2. புளியை 50 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்,
  3. அடுப்பில் கடாயை வைத்து 2  மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி துண்டுகளை போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்து ஆற விடவும்.
  4. அதே கடாயில் மீதமுள்ள 2  மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய் வத்தலையும் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும்.
  5. மிக்ஸ்சியில் வதக்கி வைத்துள்ள இஞ்சி, பொரிந்த கடுகு, வறுத்த மிளகாய் வத்தல், வெல்லத்தூள், வெந்தயப்பொடி, உப்பு இவற்றோடு புளித்தண்ணீரையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும். சுவையான இஞ்சி தொக்கு ரெடி. இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Monday, November 30, 2015

ரவா பணியாரம் / Rava Paniyaram


பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிற்றுண்டியாகும். விதவிதமாக பணியாரம் செய்தாலும் இனிப்பு பணியாரத்திற்கு என்றும் தனி வரவேற்பு உண்டு. சிறிது வித்தியாசமாக ரவா, மைதா, வாழைப்பழம் கலந்து பணியாரம் எப்படி செய்வதென்று பார்ப்போம்!

தேவையான பொருள்கள் -
  1. ரவா - 100 கிராம் 
  2. மைதா - 100 கிராம் 
  3. சீனி - 100 கிராம் 
  4. தேங்காய் துருவல் - 100 கிராம் 
  5. முந்திரிப்பருப்பு - 10
  6. சிறிய வாழைப்பழம் - 1
  7. நெய் - 50 மில்லி 
  8. எண்ணெய் - 50 மில்லி 
  9. ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி 
  10. உப்பு - 1/4 தேக்கரண்டி 
செய்முறை -
  1. தேங்காய் துருவலை 100 மில்லி அளவுக்கு பால் எடுத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பை மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
  2. வாழைப்பழத்தை மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  3. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ரவா, மைதா, சீனி முந்திரிப்பருப்பு தூள், மசித்து வைத்துள்ள வாழைப்பழம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  4. நெய், எண்ணெய் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் கலவையை ஊற்றவும். 
  6. சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் குழி கொள்ளும் அளவுக்கு மாவு ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
  7. மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்யவும். இந்த அளவுக்கு 21 பணியாரங்கள் வரும். சுவையான ரவா பணியாரம் ரெடி.

Tuesday, November 24, 2015

திருக்கார்த்திகை தீபம்


திருக்கார்த்திகை தீபம் என்பது  கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நன்னாளில் கோவில்களிலும், வீடுகளிலும் இடம்  பெறும் சிறப்பான தீபத்திருநாளாகும்.

தமிழகத்தில் உள்ள எல்லா  ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செயப்படுகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நிறைவு நாள் விழாவாக பரணி தீபம் ஏற்படும் போது மலை உச்சியிலிருக்கும் அண்ணாமலையாருக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

ஏழு அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில் 3000 கிலோ நெய் ஊற்றி 1000 மீட்டர் கடா துணியால் செய்த திரியில் இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.                 

சிவன் கோவில்களில் பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து சொக்கப்பனை கொளுத்துவார்கள். அதில் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வதால் நன்மைகள் கிடைக்கும்.

தீபத் திருநாளில் கோவில்கள் தவிர இல்லங்களிலும் தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபத்திருநாள் அன்று வீட்டை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். பூஜை அறையையும் சுத்தப்படுத்தி சுவாமி படங்களையும் நன்கு துடைத்து சந்தணம், குங்குமம் வைத்து பூச்சரம் போட்டு அலங்கரிக்க வேண்டும்.

வீட்டில் விளக்கு கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். மாலையில் 6 மணிக்கு பூஜை அறை, மற்றும் எல்லா இடங்களிலும் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். பார்ப்பதற்கு ஜெக  ஜோதியாக காட்சி அளிக்கும்.
                                                                         
இந்த நல்ல நாளில் கார்த்திகை கொழுக்கட்டை, கார்த்திகைப் பொரி செய்து கடவுளுக்கு படைத்து சகல நலமும் பெறுவோம். எல்லோருக்கும் திருக்கார்த்திகை வாழ்த்துக்கள் !!
                                                                                                                                          
நன்றி
சாரதா

எனது கார்த்திகை கொழுக்கட்டை பதிவை பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.

Thursday, November 19, 2015

மீன் ஊறுகாய் / Fish pickle

தேவையான பொருட்கள் -
  1. மீன் - 1/2 கிலோ 
  2. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி 
  3. மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி 
  4. வெந்தய பொடி - 1 மேஜைக்கரண்டி
  5. பூண்டு - 1
  6. இஞ்சி - ஒரு சிறிய துண்டு 
  7. வினிகர் - 1/2 கப்
  8. உப்பு - தேவையான அளவு 
  9. கடுகு - 1 மேஜைக்கரண்டி 
  10. கறிவேப்பில்லை - சிறிது 
  11. நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
  1. இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
  3. மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.   
  4. பிறகு அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயபொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
  5. 5 நிமிடம் ஆனதும் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சுவையான மீன் ஊறுகாய் ரெடி.

Friday, November 13, 2015

புதினா சட்னி / Pudina Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. புதினா - ஒரு சிறிய  கட்டு 
  2. பெரிய வெங்காயம் - 1
  3. புளி - பாக்கு அளவு 
  4. மிளகாய் வத்தல் - 3
  5. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  6. உளுந்தம் பருப்பு -  1 மேஜைக்கரண்டி 
  7. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  8. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு இரண்டையும் வறுத்து தனியே வைக்கவும்.
  2. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி வறுத்து வைத்துள்ள பருப்பு வகைகளோடு சேர்த்து வைக்கவும்.
  3. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் தேங்காய் துருவலை போட்டு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  4. பிறகு ஒரு மேஜைக்கரண்டி எண்ணையில் மிளகாய் வத்தலை வறுத்து அதோடு புதினா, புளி சேர்த்து வதக்கி சிறிது  நேரம் ஆறவிடவும்.
  5. ஆறிய பிறகு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் கெட்டியாக அரைக்கவும். சுவையான புதினா சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...