Thursday, February 26, 2015

முட்டை 65 / Egg 65


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 2
  2. சோளமாவு - 2 மேஜைக்கரண்டி 
  3. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  5. புட் கலர் - 1/4 தேக்கரண்டி 
  6. தயிர் - 1 மேஜைக்கரண்டி 
  7. மல்லித்தழை - சிறிது 
  8. உப்பு - தேவையான அளவு
  9. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு                                           
செய்முறை -
  1. ஒரு பாத்திரத்தில் முட்டைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். 10 நிமிடங்களில் முட்டை வெந்து விடும். பிறகு முட்டைகளின் ஓட்டை எடுத்து நான்காக வெட்டி வைக்கவும்.
                                                                                    
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய் தூள், புட்கலர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  3. அதோடு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து மஞ்சள் கரு கிழே விழாமல் மெதுவாக கலவை எல்லா இடங்களிலும் படும் படி சேர்த்து  அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
                                                                       
  4. ஊறிய பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு முட்டை துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் மெதுவாக திருப்பி போடவும். 
                                                                                
  5. இருபுறமும் வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்  எண்ணெய் உறுஞ்சியவுடன் மல்லித்தழை தூவி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான முட்டை ப்ரை ரெடி.

3 comments:

  1. புகைப்படங்கள் அருமை ஆனால் இதெல்லாம் நான் அழகாக சாப்பிடுவேன்.

    ReplyDelete
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  3. வாவ்... கில்லர்ஜி அண்ணா சொன்னது போல் ரசிச்சு சாப்பிடலாம்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...