Tuesday, June 30, 2015

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்


திருநெல்வேலியில் ஆண்டு தோறும் நடைபெறும் திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு நெல்லையப்பர் கோவிலுக்கு 511 வது தேரோட்டமாகும்.                                                                                 
                                                                                             
ஆனித் தேரோட்டம் ஜூன் 22 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆனது. காந்திமதி அம்பாளுக்கு அதிகாலை 6 மணிக்கு அபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

இதை தொடர்ந்து நந்தி முன்பு உள்ள பெரிய கொடி மரத்தில் கோவில் மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் சிவனே போற்றி, இறைவா போற்றி என்று பக்தி கோஷங்களை பாடினார்கள். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடந்தது.

23 ஆம் தேதி காலை 8  மணிக்கு அம்பாள் சப்பரத்தில் எழுந்த்தருளி வீதி உலா வந்தார். 24 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் வீதி உலா வந்தார்.

25 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி காம தேனு வாகனத்தில் உலா வந்தார். 26 ஆம் தேதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதி உலா வந்தார்.

27 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வந்தார். 28 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் முத்துப்பல்லக்கில் வீதி உலா வந்தார்.

29 ஆம் தேதி காலை 7 மணிக்கு நடராஜ பெருமாள் வெள்ளை சாத்தி எழுந்த்தருளல், காலை 8 மணிக்கு  நடராஜ பெருமாள் பச்சை எழுந்த்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 10 மணிக்கு அம்பாள் தங்கக்கிளி வாகனத்தில் வீதி உலா வந்தார்.

30 ஆம் தேதியான இன்று  காந்திமதி அம்பாள் திருத்தேரில் கம்பீரமாக அமர்ந்து வர பக்த்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை முதலான பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. எனவே குடும்பத்துடன் வந்து ஆர்வத்துடனும் பக்தியுடனும் கலந்து கொண்டு தேரோட்டத்தை கண்டு களித்தனர்.

இன்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வருக்கு என்று 5 தேர்கள் இழுக்கப்படும்.

ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு  திருமதி காயத்ரி கிரிசின், திரு ஞானசம்பந்தம், திருமதி ஜனனி, பாம்பே சாரதா, பால சுந்தரம், வீரமணி, சகோதரிகள் சுபலட்சுமி, சுவர்ணலதா ஆகியோரின் கச்சேரி நடந்தது.

இன்று  நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இனிதே முடிந்தது.

நன்றி
சாரதா

14 comments:

  1. அருமையான தொகுப்பு... நன்றி...

    ReplyDelete
  2. நெல்லையப்பர் கோயில் சென்றுள்ளேன். தேரோட்டம் பார்த்ததில்லை. தங்களின் பதிவால் அவ்வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  3. நெல்லையப்பர் திருக்கோயிலில் தரிசனம் செய்திருக்கின்றேன்..
    ஆயினும் தேரோட்டம் கண்டதில்லை..

    தங்கள் பதிவில் - தேரோட்டம் கண்டேன். மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  4. நேரில் பார்ப்பது போல் பதிவு இருக்கின்றது. நெல்லையப்பர் கோவிலுக்கு நானும் சென்றுள்ளேன். எங்க ஊர் மாதிரி இருந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பிரியசகி நீங்க நெல்லையப்பர் கோவில் பார்த்திருக்கீங்களா ? மிகவும் சந்தோஷமாக இருக்கு. உங்கள் ஊர் போல நினைத்தற்கும் மிக்க நன்றி.

      Delete
  5. நேர் முக வர்ணனை போல் இருந்தது நன்றி ! நேரில் பார்த்தது போல் இருந்தது. வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  6. கருத்துக்கு மிக்க நன்றி இனியா.

    ReplyDelete
  7. நெல்லையப்பர் கோயில் சென்றுள்ளேன், அருமையான தொகுப்பு, நெரில் பார்த்தது போல் உள்ளது,
    வாழ்த்துக்கள். நன்றிம்மா

    ReplyDelete
  8. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேஸ்வரி.

    ReplyDelete
  9. நல்ல தேர் திருவிழா தொகுப்பு சகோ...

    ReplyDelete
  10. ஓம் நமச்சிவாய! தேரோட்டம் கண்டேன் உங்கள் தயவில் நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...