Friday, April 22, 2016

கத்தரிக்காய் வறுவல் / Brinjal Fry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கத்தரிக்காய் - 6
  2. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 
  3. கடலை மாவு - 2 தேக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
  6. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
  1. கத்தரிக்காய்களை வட்டவட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. பிறகு தண்ணீரை வடித்து விட்டு அதன் மேல் மிளகாய் தூள், கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கத்தரிக்காயின் மேல் எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவவும். கல் சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் கத்தரிக்காய் துண்டுகளை பரப்பி வைத்து சுற்றிலும் எண்ணெய் விடவும். 2 நிமிடம் ஆனதும் திருப்பி போடவும்.
  4. இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா கத்தரிக்காய் துண்டுகளையும் இதே முறையில் வறுத்து எடுக்கவும். சுவையான கத்தரிக்காய் வறுவல் ரெடி. சாம்பார் சாதம், தயிர் சாதம் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
     

Monday, April 11, 2016

கருவாட்டு குழம்பு / Dry Fish Curry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வஞ்சீர கருவாடு - 3 துண்டுகள் 
  2. தக்காளி - 1
  3. பச்சை மிளகாய் -1
  4. புளி - சிறிய எலுமிச்சை அளவு 
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. உப்பு - தேவைக்கேற்ப
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 4
  2. கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி 
  3. மிளகு - 1 தேக்கரண்டி 
  4. சீரகம் - 1 தேக்கரண்டி 
  5. பூண்டு பற்கள் - 2
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. சின்ன வெங்காயம் - 10
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 6
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. கருவாடு துண்டுகளை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. தக்காளியை பொடிதாகவும், வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.
  3. புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு, சீரகம், பூண்டுப் பற்கள் எல்லாவற்றையும் போட்டு லேசாக வறுத்து எடுத்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்
  5. பிறகு தேங்காய் துருவல், சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து மிக்ஸ்சியில் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
     
  6. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் வெந்தயம் போடவும்.
  7. வெந்தயம் சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. தக்காளி வதங்கியதும் புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
  9. புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
  10. பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும். 
  11. கடைசியாக கருவாடை சேர்த்து கருவாடு வேகும் வரை கொதிக்க விடவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான கருவாட்டு குழம்பு ரெடி.
குறிப்பு - 
  1. கருவாடில் உப்பு இருப்பதால் உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.
  2. எந்த வகை கருவாடு உபயோகித்தும் குழம்பு வைக்கலாம்.

Monday, April 4, 2016

புடலங்காய் தோல் துவையல் / Snake Gourd Thuvaiyal



தேவையான பொருள்கள் -
  1. புடலங்காய் தோல் - 1 கப் ( 1/4 கிலோ புடலங்காயில் சீவிய தோல் )
  2. மிளகாய் வத்தல் - 4
  3. புளி - சிறு கோலி அளவு 
  4. பூண்டு பற்கள் - 3
  5. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  6. சீனி - 1 தேக்கரண்டி 
  7. நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தல், பூண்டு, புளி சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
  2. அதே கடாயில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து புடலங்காய் தோலை போட்டு வதக்கவும். 
  3. தோல் நன்கு வதங்கியதும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி வறுத்து வைத்துள்ள பொருள்களோடு சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.
  4. ஆறியவுடன் அதனுடன் உப்பு, சீனி சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும். சுவையான புடலங்காய் தோல் துவையல் ரெடி. சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...