Friday, May 20, 2016

பாசிப்பயறு இனிப்பு சுண்டல் / Green Gram Sweet Sundal


தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பயறு - 100 கிராம் 
  2. அச்சு வெல்லம் - 50 கிராம் 
  3. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  5. உப்பு - 1 சிட்டிகை 
செய்முறை-
  1. பாசிப்பயறை நன்றாக கழுவி விட்டு பயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பிறகு அடுப்பை மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
  3. வெந்த பிறகு அதிலுள்ள தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
  4. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் பாசிப்பயறு வேக வைத்த தண்ணீர் (50 மில்லி) சேர்த்து அடுப்பில் வைக்கவும். அச்சுவெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி வைக்கவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரைப் பாகை ஊற்றி கொதிக்க விடவும்.
  6. கொதிக்க ஆரம்பித்ததும் அவித்து வைத்துள்ள பாசிப்பயறு, உப்பு இரண்டயும் சேர்க்கவும்.
  7. பாகு கெட்டியாகி வரும் போது ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பாசிப்பயறு இனிப்பு சுண்டல் ரெடி.


Thursday, May 12, 2016

இட்லிப் பொடி - 2 / Idli Podi - 2


தேவையான பொருள்கள் -
  1. வெள்ளை முழு உளுந்து - 1 கப் 
  2. கடலைப்பருப்பு - 1/2 கப் 
  3. மிளகாய் வத்தல் - 10
  4. காயத்தூள் - 1 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
செய்முறை -

  1. அடுப்பில் வெறும் கடாயை வைத்து உளுந்தம் பருப்பை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வாசம் வரும் வரை வறுத்து தனியே வைக்கவும்.
  2. அடுத்து கடலைப்பருப்பை போட்டு வறுத்து அடுப்பை அணைத்து விடவும்.
  3. அந்த சூட்டில் மிளகாய் வத்தல், காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி வறுத்து வைத்திருக்கும் உளுந்தம் பருப்போடு சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  4. ஆறியதும் மிக்ஸ்சியில் திரிக்கவும். பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
இட்லி பொடி - 1 செய்து பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.

Tuesday, May 3, 2016

இனிப்பு போளி / Sweet Poli

தேவையான பொருட்கள்
  1. மைதா மாவு - 1 கப்  (200 கிராம்)
  2. வெல்லம்  - 3/4 கப் 
  3. கடலை பருப்பு - 3/4 கப்
  4. மஞ்சள் பொடி - 1/4 மேஜைக்கரண்டி
  5. ஏலக்காய் தூள் - 1/4 மேஜைக்கரண்டி 
  6. எண்ணெய் - 5 அல்லது 6 மேஜைக்கரண்டி
  7. உப்பு - 1 சிட்டிகை 
  8. நெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, மஞ்சள் தூள், 4 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக தளர்வாக பிசைந்து கொள்ளவும். பிறகு 1 மேஜைக்கரண்டி எண்ணெயை மேலே தடவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் கடலைப்பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது.
  3. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வைத்திருந்து பிறகு அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து வெந்த கடலைபருப்பை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். ஒரு முழு கடலைப்பருப்பு கூட இல்லாமல் நன்றாக பொடித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் போளி தேய்க்கும் போது மாவை விட்டு வெளியே வரும்.
  4. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
  5. மறுபடி அடுப்பில் கடாயை வைத்து வடிகட்டி வைத்துள்ள வெல்லக்கரைசலை ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள், பொடித்து வைத்துள்ள கடலைமாவை சேர்த்து கிளறவும். 
  6. கடலைப்பருப்பு வேக வைக்கும் போதும், வெல்லத்தை கரைக்கும் போதும் அளவான தண்ணீர் சேர்த்திருந்தால் 5 நிமிடங்களில் மாவு கட்டியாக சுருண்டு வந்து விடும். இல்லாவிட்டால் மாவு சுருண்டு வர சிறிது நேரம் எடுக்கும்.
  7. நன்கு ஆறியதும் 10 உருண்டையாக உருட்டி வைக்கவும்.
  8. ஊறிய மைதா மாவை எடுத்து 10 உருண்டைகளாக உருட்டி வைக்கவும். வெல்ல உருண்டை பெரியதாகவும், மைதா மாவு உருண்டை சிறியதாகவும் இருக்க வேண்டும்.
  9. சப்பாத்திக்கல்லில் சிறிது மாவை தூவி கொள்ளவும். மைதா உருண்டையை வைத்து சிறிய வட்டமாக தேய்த்து அதன் நடுவில் வெல்ல உருண்டையை வைத்து நன்கு மூடவும்.
  10. பிறகு கட்டையை வைத்து ரொம்ப அழுத்தம் கொடுக்காமல் லேசாக தேய்த்து வட்டமாக விரிக்கவும்.
  11. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானவுடன் போளியை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
  12. இப்போது போளியை சுற்றி ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றவும். இரு புறமும் நன்கு வெந்ததும் போளியை எடுத்து தட்டில் வைக்கவும். சுவையான போளி ரெடி.
  13. மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் செய்யவும். இந்த அளவுக்கு 10 அல்லது 11 போளிகள் வரும்.
குறிப்புகள் -
  1. கடலைப்பருப்பை வேகும் வைக்கும் பொது அதிகமாக தண்ணீர் சேர்த்து விட்டு வேக வைத்திருந்தால் மிக்சியில் பொடிக்க கடினமாக இருக்கும். அதற்கு பதிலாக ஒரு மத்தை வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். 
  2. அதிக தண்ணீரால் மாவு சுருண்டு வர நேரம் எடுத்தால் பொட்டு கடலையை பொடித்து அதை 4 அல்லது 5 மேஜைக்கரண்டி சேர்த்துக் கொண்டால் சீக்கிரமாக மாவு பதத்திற்கு வந்து விடும். 
Related Posts Plugin for WordPress, Blogger...