Friday, July 29, 2016

மாம்பழ ஜாம் / Mango Jam


தேவையான பொருள்கள் -
  1. பழுத்த மாம்பழம் - 4
  2. சீனி - 200 கிராம் 
  3. லெமன் ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி 
செய்முறை -
  1. மாம்பழங்களை நன்றாக கழுவி அதன் தோலை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை போட்டு 5 நிமிடம் வரை கிளறவும்.
  3. பிறகு அதனுடன் சீனி, லெமன் ஜூஸ்  சேர்த்து ஜாம் பதம் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும். 
  4. ஜாம் பதம் தெரிந்து கொள்ள ஒரு சிறிய தட்டை ப்ரீஸரில் வைக்கவும். ஜாமை சிறிது எடுத்து அந்த குளிர்ந்த தட்டில் வைக்கவும். இவ்வாறு செய்வதால் ஜாம் உடனே ரூம் டெம்பரேச்சருக்கு வந்து விடும். அதை ஒரு விரலால் நடுவே கோடு போடவும். இரண்டு பக்கமும் ஒட்டாமல் தனித்தனியாக பிரிந்தால் அது தான் சரியான பதம். ஜாம் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  5. நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். பிரிஜ்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். தோசை, இட்லி, பூரி பிரெட்டுடன் சேர்த்து  சாப்பிட நன்றாக இருக்கும்.

6 comments:

  1. வணக்கம் சகோதரி

    மாம்பழ ஜாம் செய்முறை அழகாக விளக்கியுள்ளீர்கள்! செய்முறையை படித்தவுடனே செய்து சாப்பிடும் ஆசை வருகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.ஒரு சந்தேகம், லெமனை அடுப்பில் வைத்து உபயோகித்தால் கசப்புத் தன்மை வராமல் இருக்குமா?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. கசப்பு தன்மை இருக்காது சகோதரி. ஜாம் கெடாமல் இருப்பதற்கு எலுமிச்சை ஜூஸ் சேர்ப்பது வழக்கம். வருகைக்கு நன்றி.

      Delete
  2. அருமையான விளக்கம்,,

    ஆனா யாராவது செய்துக்கொடுத்தால் சாப்பிடலாம்,,,

    முயற்சிக்கிறேன் மா,,

    ReplyDelete
  3. வாங்க மகேஸ்வரி வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் கருத்தை பார்க்க முடிந்தது. பௌலில் இருப்பதை எடுத்து சாப்பிட்டு இருக்கலாமே !

    ReplyDelete
  4. மாம்பழங்களின் வருகையின் போது - இது வழக்கமான ஒன்றே.. ஆயினும் எலுமிச்சை சாறு சேர்ப்பதில்லை..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...