Friday, September 30, 2016

பாவ் பாஜி / Pav bhaji

பாவ் பாஜி மும்பையில் மிகவும் பிரபலமானதாகும். அதை எப்படி செய்வதென்று பார்ப்போம்!

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 3
  2. பிரஷ் பட்டாணி - 100 கிராம் 
  3. காலிபிளவர் - 100 கிராம் 
  4. கேரட் - 1 சிறியது 
  5. குடமிளகாய் - 1
  6. பெரிய வெங்காயம் - 1
  7. தக்காளி - 1
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
  9. காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  10. பாவ் பாஜி மசாலா - 1 மேஜைக்கரண்டி 
  11. வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  12. மல்லித்தழை - சிறிது 
  13. உப்பு - தேவையான அளவு
  14. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் தோல் சீவி வெட்டி வைக்கவும். காலி பிளவரையும் நறுக்கி வைக்கவும்.
  2. குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், காலிபிளவர்,  மற்றும் பட்டாணி, சிறிது உப்பு  சேர்த்து 3 விசில் வரும் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
      
  3. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து வெந்த காய்கறிகளை ஒரு மத்து கொண்டு நன்கு மசித்து கொள்ளவும்.
  4. வெங்காயம், தக்காளி, குடமிளகாய்,  மல்லித்தழை எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  6. பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள குடமிளகாய் சேர்த்து வதக்கவும். குடமிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. தக்காளி நன்கு வதங்கியதும் காஷ்மீரி மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து  ஒரு நிமிடம் கிளறவும்.
  8. பிறகு மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி 100 மில்லி தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். மூடி போட்டு கொதிக்க விடவும்.
  9. மசாலா கெட்டியானதும் வெண்ணெய் சேர்த்து கிளறி பிறகு மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பாவ் பாஜி மசாலா ரெடி.
பாவ் பன் செய்முறை - 
  1. தேவையான அளவுக்கு பாவ் பன் எடுத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து லேசாக சூடானதும் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். பன்னை அதில் சேர்த்து இருபுறமும் லேசாக சூடு படுத்தி எடுத்துக் கொள்ளவும்.
  2. சூடு படுத்திய பாவ் பன்னோடு இந்த மசாலாவை சேர்த்து அதன் மேல் சிறிது வெண்ணெய் வைத்து பரிமாறவும்.

Thursday, September 22, 2016

உருளைக்கிழங்கு மசாலா / Potato Masala


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு -4
  2. தக்காளி - 1
  3. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
  6. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி 
  3. பெரிய வெங்காயம் - 1
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து சிறிது நேரம் ஆறவிடவும். நன்கு ஆறியதும் தோலுரித்து மசித்து வைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்..
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம் போடவும். பெருஞ்சீரகம் பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
  5. பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
  6. மசாலா வாடை போனதும் மசித்து வைத்துள்ள கிழங்குகளை சேர்க்கவும்.
  7. மசாலா கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான உருளைக்கிழங்கு மசாலா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும்.

Tuesday, September 13, 2016

பாதாம் பர்பி / Badham Burfi

தேவையான பொருள்கள் -
  1. பாதாம் பருப்பு - 200 கிராம் 
  2. சீனி - 300 கிராம் 
  3. பால் - 100 மில்லி 
  4. இனிப்பில்லாத கண்டஸ்டு  மில்க் - 100 மில்லி 
  5. கேசரி கலர் - சிறிது 
  6. நெய் - 4 மேஜைக்கரண்டி              
செய்முறை -
  1. முதலில் பாலை லேசாக சூடு  பண்ணி அதில் பாதாம் பருப்பை 15 நிமிடம் ஊற வைக்கவும். 
  2. ஊறிய பிறகு பாதாம் பருப்பின் தோலை எடுத்து ஊற வைத்துள்ள பாலோடு சேர்த்து மிக்ஸ்யில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு டிரேயில் 2 மேஜைக்கரண்டி நெய்யை தடவி தனியாக வைக்கவும்.
  4. அடுப்பில் நான்ஸ்டிக் கடாயை வைத்து அரைத்து வைத்துள்ள பாதாம் பருப்பு கலவையை போட்டு 3 நிமிடம் வரை இடை விடாமல் கிளறவும்.
  5. பிறகு சீனியை சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியில் கண்டன்ஸ்டு பால், கேசரி கலர், மீதமுள்ள நெய் சேர்த்து பர்பி பதம் வரும் வரை இடை விடாமல் கிளறவும்.
  6. பர்பி பதம் வந்தவுடன் நெய் தடவிய டிரேயில் பரப்பவும். லேசாக சூடு இருக்கும் போது துண்டுகள் போடவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...