Thursday, October 27, 2016

ஆப்பிள் அல்வா / Apple Halwa


தேவையான பொருள்கள் -
  1. ஆப்பிள் - 2
  2. சீனி - 4 மேஜைக்கரண்டி 
  3. நெய் - 5 மேஜைக்கரண்டி 
  4. முந்திரிப் பருப்பு - 10
செய்முறை -
  1. ஆப்பிளை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
  3. அடுப்பில் அதே கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் ஆப்பிள் துருவலை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகும் வரை நன்கு கிளறவும்.
  4. நன்கு வெந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், சீனி, இரண்டையும் சேர்த்து அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
  5. அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான ஆப்பிள் அல்வா ரெடி.

Wednesday, October 26, 2016

ரிப்பன் பக்கோடா / Ribbon Pakoda


தேவையான பொருள்கள் -
  1. அரிசி மாவு - 1 கப் 
  2. கடலை மாவு - 1 /2 கப் 
  3. பொட்டுக் கடலை மாவு - 1/2 கப் 
  4. மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி 
  5. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  6. காயத் தூள் - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
  1. அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு மூன்றையும் தனித் தனியாக சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு, மிளகாய் தூள், காயத் தூள், நெய், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து வைக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முறுக்கு குழலில் ரிப்பன் பக்கோடா அச்சை  போட்டு பிசைந்த மாவை குழாய் கொள்ளும் அளவுக்கு நிரப்பி வட்டமாக பிழிந்து விடவும்.
  4. ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
  5. எண்ணெய் உறிஞ்சியவுடன் சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். டீயுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Friday, October 14, 2016

வீட்டில் பனீர் தயாரிக்கும் முறை / Home made Paneer


தேவையான பொருள்கள் -
  1. பால் - 1 லிட்டர்  
  2. எலுமிச்சம் பழம் - 1
செய்முறை -
  1. எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் கொதித்தது பொங்கி வரும் போது எலுமிச்சை சாறை ஊற்றி ஒரு கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.
  3. பால் திரிந்து இதே போல் வரும். பால் திரிந்தும் அடுப்பை அணைத்து விடவும்.
  4. திரிந்த பாலை ஒரு மெல்லிய காட்டன் துணியில் வடி கட்டவும். பிறகு துணியை சுருட்டி தண்ணீரை நன்கு பிழியவும்.
  5. துணி மூட்டையை ஒரு பலகை அல்லது தட்டு மேல் வைத்து அதன் மேல் ஒரு கனமான தட்டையான பொருளை அதன் மேல் வைக்கவும். கனமான பொருள் இல்லையென்றால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் மேல் வைக்கவும்.
  6. இரண்டு மணி நேரம் கழித்து பார்க்கும் போது நன்கு கெட்டியாகி விடும். பின்பு துண்டுகள் போடவும்.
  7. பனீர் துண்டுகளை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு பிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளவும். தேவையான போது எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். ஒரு லிட்டர் பாலுக்கு 20 பனீர்  துண்டுகள் வரும்.    
Related Posts Plugin for WordPress, Blogger...