Tuesday, February 21, 2017

வரமல்லி சட்னி / முழு கொத்தமல்லி சட்னி / Coriander Seeds Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தேங்காய் துருவல் - 1/2 கப் 
  2. முழு கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
  4. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
  5. மிளகாய் வத்தல் - 2
  6. புளி - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முழு கொத்தமல்லி, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு நன்கு வறுக்கவும்.
  2. பிறகு அதனுடன் மிளகாய் வத்தல், புளி, தேங்காய்  துருவல் மூன்றையும் சேர்த்து லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  3. நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களோடு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும். சுவையான வரமல்லி சட்னி ரெடி. இட்லி. தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

8 comments:

  1. இந்த துவையல் நானும் செய்வேன்.
    படங்களுடன் செய்முறை அருமை.

    ReplyDelete
  2. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. அருமையான உணவு
    சிறந்த வழிகாட்டல்

    ReplyDelete
  5. Ya i try this its awesome mam

    ReplyDelete
  6. தமிழிலில் கொத்தமல்லி என்றால் பொதுவாக பச்சை கொத்தமல்லியை குறிப்பது வழக்கம். தனியா என்று குறிப்பிடலாமே..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...