Monday, March 27, 2017

தேங்காய் சட்னி - 2 / Coconut Chutney - 2


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தேங்காய் துருவல் - 1/2 கப் 
  2. பச்சை மிளகாய் - 1
  3. இஞ்சி - ஒரு சிறிய துண்டு 
  4. சின்ன வெங்காயம் - 10
  5. மல்லித்தழை - சிறிது 
  6. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் போட்டு வதக்கவும்.
  2. நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், மல்லித்தழை இரண்டையும் சேர்த்து வதக்கி சிறிது நேரம் ஆறவிடவும். நன்கு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான தேங்காய் சட்னி ரெடி.

Thursday, March 23, 2017

பனீர் கட்லெட் / Paneer Cutlet


தேவையான பொருள்கள் -

  1. பனீர் - 100 கிராம் 
  2. உருளைக்கிழங்கு - 1
  3. பெரிய வெங்காயம் - 1
  4. பச்சை மிளகாய் - 1
  5. மல்லித்தழை - சிறிது 
  6. பிரட் தூள் - 1/2 கப் 
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  8. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
  9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  10. உப்பு - தேவையான அளவு 
  11. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -

  1. பனீரை துருவிக்கொள்ளவும். வெங்காயம், மல்லித்தழை பச்சை மிளகாய் மூன்றையும் பொடிதாக  நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் துருவி வைத்துள்ள பனீர், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ,மல்லித்தழை, பச்சை மிளகாய்  மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு,இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வட்டமாக  தட்டி பிரட் தூளில் பிரட்டி வைக்கவும்.
  3.  ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை போட்டு பொரித்தும் எடுக்கவும். இரு புறமும் நல்ல பொன்னிறமானதும் எடுத்து விடவும். எல்லா கட்லெட்களையும் இதே முறையில் செய்யவும். 
  4. இந்த அளவுக்கு 12 கட்லெட்கள் வரை வரும். சுவையான கட்லெட் ரெடி. தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Wednesday, March 15, 2017

தக்காளி சாதம் -2 / Tomato Rice - 2


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அரிசி - 1/2 கப் 
  2. தக்காளி - 2
  3. பெரிய வெங்காயம் - 2
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  6. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2  தேக்கரண்டி 
  8. மல்லித்தழை - சிறிது 
  9. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 2
செய்முறை -
  1. பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். தக்காளி , வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். 
  4. தக்காளி நன்கு சுருள வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், மல்லித்தழை சேர்த்து  அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
  5. பிறகு ஒரு கப் தண்ணீருடன் உப்பு மற்றும் ஊற வைத்துள்ள அரிசி சேர்த்து மூடி போடவும்.
  6. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து  நன்றாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான தக்காளி சாதம் ரெடி.

Monday, March 6, 2017

கடலை மாவு லட்டு / Besan Laddu

நான் வலைப்பூ ஆரம்பித்து இன்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 348  பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பதிவுகளை பார்த்து கருத்து சொன்ன நட்புள்ளங்களுக்கும், சில பதிவுகளை செய்து பார்த்து கருத்து சொன்ன நட்புள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நல்ல நாளில் ஈஸியான கடலை மாவு லட்டு ஸ்வீட் பதிவு !!
தேவையான பொருள்கள் -
  1. கடலை மாவு - 1 கப்
  2. சீனி - 3/4 கப்
  3. நெய் - 1/2 கப்
  4. முந்திரிப்பருப்பு - 10
செய்முறை -
  1. சீனி, முந்திரிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் திரித்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் நான்ஸ்டிக் கடாயை வைத்து 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடலைமாவை போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.
  3. வறுத்த கடலைமாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் ஆற விடவும். நன்கு ஆறிய பிறகு அதனுடன் பொடித்து வைத்துள்ள சீனி, மீதமுள்ள நெய், எல்லாவற்றையும் நன்றாக கலந்து சிறு சிறு லட்டுகளாக பிடிக்கவும்.
குறிப்பு -
  1. உருட்ட வரவில்லை என்றால் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

Friday, March 3, 2017

ஹெல்த் கேர் பத்திரிக்கையில் என்னுடைய பாவ் பாஜி ரெசிபி !

                                

மார்ச் 2017 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய பாவ் பாஜி ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஐந்து மாதங்களாக  என்னுடைய ரெசிபிகள் ஹெல்த் கேர் பத்திரிக்கையில் வந்து கொண்டிருக்கிறது. நவம்பர் மாத இதழில் இட்லி  மஞ்சூரியனும், டிசம்பர்  மாத இதழில்  பனீர் தயாரிக்கும் முறை ரெசிபியும், ஜனவரி மாத இதழில் வெள்ளை அவல் புட்டு ரெசிபியும், பிப்ரவரி மாத இதழில் சுரைக்காய் அடை ரெசிபியும் வெளி வந்தது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி
சாரதா 
Related Posts Plugin for WordPress, Blogger...