Wednesday, April 19, 2017

ஹெல்த் கேர் பத்திரிக்கையில் என்னுடைய கதம்ப பொரியல் ரெசிபி !

   


ஏப்ரல் 2017 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய கதம்ப பொரியல் ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆறு  மாதங்களாக  என்னுடைய ரெசிபிகள் ஹெல்த் கேர் பத்திரிக்கையில் வந்து கொண்டிருக்கிறது.  கதம்ப பொரியல் ஆறாவது ரெசிபி ஆகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி
சாரதா 

Tuesday, April 18, 2017

பனீர் 65 / Paneer 65


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பனீர் - 100 கிராம் 
  2. மைதாமாவு - 2 மேஜைக்கரண்டி 
  3. சோளமாவு - 1 மேஜைக்கரண்டி 
  4. தயிர் - 1 மேஜைக்கரண்டி 
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  6. சிவப்பு மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  7. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. லெமன் ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
  10. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. பனீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், லெமன் ஜூஸ், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு பனீர் துண்டுகளை டிப் பண்ணி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு பனீர் துண்டுகளை போடவும்.
  3. ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். சுவையான பனீர் 65 ரெடி.

Friday, April 7, 2017

காளான் குழம்பு - 2 / Mushroom Gravy - 2


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காளான் - 200 கிராம் 
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  8. மல்லித்தழை - சிறிது 
  9. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 1/4 கப் 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - ஒரு இன்ச் அளவு 
  3. கிராம்பு - 2
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் காளானை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
  2. தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் காளானை சேர்த்து கிளறவும்.
  5. காளான் வதங்கியதும் ஒரு கப் தண்ணீரும், உப்பும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
  6. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான காளான் குழம்பு ரெடி. பூரி, சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். 
Related Posts Plugin for WordPress, Blogger...