Friday, November 3, 2017

திருநெல்வேலி சொதி / Tirunelveli Sothi


எங்கள் ஊரான திருநெல்வலியில் இந்த சொதி குழம்பு மிகவும் பிரபலமானதாகும். நிறைய வீடுகளில் அடிக்கடி சொதி குழம்பு செய்வார்கள். சில ஹோட்டல்களில் வெள்ளிக்கிழமை தோறும் சொதி குழம்பு தான் இருக்கும். இனி சொதி குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பருப்பு - 50 கிராம் 
  2. பீன்ஸ் - 4
  3. கேரட் - 1
  4. உருளைக்கிழங்கு - 1
  5. பச்சை மிளகாய் -2
  6. இஞ்சி - 1 இன்ச் அளவு 
  7. பூண்டுப்பல் - 2
  8. லெமன் -சிறிய துண்டு 
  9. உப்பு - தேவையான அளவு 
தேங்காய் பால் எடுக்க -
  1. தேங்காய் - 1/2 மூடி 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. சின்ன வெங்காயம் - 10
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும். இஞ்சியை துருவி சாறு எடுத்துக்கொள்ளவும். லெமனை பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
  2. தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கெட்டியான பால் எடுத்து தனியே வைக்கவும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டாவது பால் எடுத்து தனியே வைக்கவும். மூன்றாவது முறையும் இதே போல் எடுத்து இரண்டாவது எடுத்த பாலோடு கலந்து வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பாசிப்பருப்பை போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுத்து அதோடு பச்சை மிளகாய், பூண்டு பல் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் ஒரு அடிக்கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கி சேர்த்து வைத்துள்ள தேங்காய் பாலுடன் இஞ்சி சாறு, மற்றும்  உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
  6. காய்கள் வெந்ததும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் முதலில் எடுத்த கெட்டியான தேங்காய் பாலுடன் எலுமிச்சை சாறு  சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பை அணைக்கவும். சுவையான திருநெல்வேலி சொதி ரெடி.
  7. சொதி குழம்பு பிளைன் சாதம், பிரியாணி வகைகள், புலாவ் வகைகள், சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

4 comments:

  1. தேங்காய்ப்பால் குழம்பு என்று எங்கள் வீட்டில் செய்வதுண்டு..

    நல்லபதிவு.. வாழ்க நலம்..

    ReplyDelete
  2. புதிய குழம்பு அறிமுகம்...
    அருமை அம்மா.

    ReplyDelete
  3. Yummy n tasty !! Thanks a lot !!

    ReplyDelete
  4. சொதி வைத்த அன்று குதி போட்டு ஒரு பிடி அனைவரும்...இஞ்சி துவையல்..best..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...